கம்பராமாயணம் 3108 · ஆரணிய 6.151

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு , அரக்கரது ஆவி
தோய்ந்த ; தோய்வு இலாப் பிறைமுகச் சரம் சிரம் துமித்த ;
காய்ந்த வெம் சரம் நிருதர்தம் கவச மார்பு உருவப்
பாய்ந்த ; வஞ்சகர் இதயமும் பிளந்தன , பல்லம் .

பொருள் · Meaning in Tamil

ஆய்ந்த - (இராமபிரானால்) ஆராய்ந்தெடுத்து எய்யப் பெற்ற; கங்கபத்திரங்கள் - கங்கபத்திரம் என்னும் ஒருவகை அம்புகள்; புக்கு - உடம்புக்குள் புகுந்து; அரக்கர் தம் ஆவி தோய்ந்த - அரக்கர்களின் மார்பிலே அழுந்தின; தோய்வு இலாப் பிறை முகச் சரம் - மேற் சொன்னவாறு அரக்கர் உடலில் புகாத அர்த்த சந்திர பாணங்கள்; சிரம் துமித்த - அவ் அரக்கர் சிலரின் தலைகளைத் துண்டித்தன; காய்ந்த வெம்சரம் - (இராமன் எய்த) மிகக் கொடிய சில அம்புகள்; நிருதர்தம் கவச மார்பு உருவ - அரக்கருடைய கவசம் அணிந்த மார்பு ஊடுருவும்படி; பாய்ந்த - நுழைந்தன; பல்லம் - வேறு சில அம்புகள்; வஞ்சகர் இதயமும் பிளந்தன - வஞ்சனை நிறைந்த அரக்கர்களின் நெஞ்சையும் பிளந்துவிட்டன. இச்செய்யுளில் கங்க பத்திரம், பிறைமுகச்சரம், சரம், பல்லம் ஆகிய பலவகை அம்புகள் குறிக்கப் பெற்றுள்ளன; அதனால் இது பொருட்பின்வரு நிலையணியாம். இராக்கதரைக் குறிக்க அரக்கர், நிருதர் வஞ்சகர் என்ற சொற்கள் அமைந்தமையால் இதுவும் பொருட் பின்வரு நிலையணியாம்.

கங்க பத்திரம் - கழுகின் இறகையுடையது என்னும் காரணப் பொருளது. பிறைமுகச் சரம் - பிறைவடிவில் அமைந்த அம்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The chosen heron-feathered arrows went in and steeped themselves in the demons' lives;
  2. the crescent-headed arrows that did not sink in sheared off heads;
  3. the burning, cruel arrows leapt through the armoured chests of the demons;
  4. the broad-headed bhalla shafts split even the hearts of the deceivers.

What the poem says

The poet names the different kinds of arrow Irāmaṉ uses and what each does. The kaṅkapattiram, feathered with heron or vulture plumes, sinks deep into the body; the crescent-headed arrows behead; others pierce armoured chests; the broad-bladed pallam split the hearts of the treacherous demons.

The verse is built on varied words for one thing: several names for arrows, and several names for demons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āynta kaṅkapattiraṅkaḷ pukku, arakkartam āvi
tōynta; tōyvu ilāp piṟai mukac caram ciram tumitta;
kāynta veñ caram nirutartam kavaca mārpu uruvap
pāynta; vañcakar itayamum piḷantaṉa, pallam.