கம்பராமாயணம் 3109 · ஆரணிய 6.152
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தூடணன் விடு சுடுசரம் யாவையும் - தூடணன் எய்த கொடிய அம்புகள் அனைத்தும்; துணியா - துணிபடவும்; மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா - அவனருகில் நின்ற அரக்கர்கள் ஏவிய படைக்கலங்களும் அழியவும்; ஆடல் கொண்டனன் - போர் செய்யும் ஆடலைக் கொண்டவனாய் (இராமபிரான்; அளப்பு அரும் பெரு வலி அரக்கர் கூடி நின்ற - அளவிடுவதற்கரிய பெரிய வலிமையையுடைய அரக்கர்கள் ஒன்று கூடி நின்ற; அக் குரைகடல் வறள்படக் குறைத்தான் - ஒலிக்கும் கடல் போன்ற அச் சேனையை வற்றிப் போகும்படி அழித்தான்.
இராமபிரான் மிக எளிதாக அரக்கர் சேனைக் கடலையழித்தமை கூறுவது இது. மிகக் கொடிய அரக்கர் சேனையைத் தான் ஒருவனே தனியாக அழித்தான் என்பார் 'ஆடல் கொண்டனன் குறைத்தான்' என்றார்.
துணியா, மாற்றா: உடன்பாட்டு வினைகள். கொண்டனன்: முற்றெச்சம். அரக்கர் படைகளைக் குரைகடல் என்பதற்கேற்ப 'வறள்படக் குறைத்தான்' என்ற நயம் உணரத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Cutting to pieces all the burning arrows Tūṭaṇaṉ loosed,
- turning back the weapons hurled by those who stood beside him,
- making it a game, he wore down that roaring sea
- of demons of immeasurable might gathered there until it ran dry.
What the poem says
Irāmaṉ cuts down every arrow Tūṭaṇaṉ shoots and wards off the weapons of the demons around him.
For him the battle is a kind of play. Alone, he whittles away the huge demon army, which roared like the sea, until that sea has run dry.