கம்பராமாயணம் 3112 · ஆரணிய 6.155

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அப்பொழுது) தூடணன் - தூடணன் என்னும் சேனைத் தலைவன்; களிறு - யானைகளும்; தேர் - தேர்களும்; பரி - குதிரைகளும்; கடுத்தவர் முடித்தலை - கோபித்துப் போர் செய்த அரக்கர்களின் பொன்முடியணிந்த தலைகளும்; கவந்தம் - (அவர்களின்) குறையுடல்களும்; ஒளிறு பல்படை - விளங்கும் பல வகை ஆயுதங்களையுடைய; தம் குலத்து அரக்கர் தம் - தங்கள் குலத்தில் தோன்றிய சேனைத் தலைவர்களாகிய அரக்கர்களின்; உடலம் - உடல்களும்; வெளிறு சேர் நிணம் - வெண்ணிறமுடைய (அவர்களுடைய) கொழுப்பும்; பிறங்கிய அடுக்கலின் மீதா - (ஆகிய இவை) உயர்ந்து குவிந்ததனாலாகிய மலைகளின் மேலே; குளிறு தேர் கடிது ஓட்டினன் - முழக்கம் செய்கின்ற (தன்) தேரை விரைவில் செலுத்தினான்; கொதித்தான் - (அவ்வாறு தேரைச் செலுத்தியவனாகிய தூடணன் தன் இனத்தவரான அரக்கர்களின் பிணக் குவியல்களைக் கண்டு) மனங் கொதித்தவன் ஆயினான்.

நால்வகைச் சேனைகளோடு அரக்கரின் கவந்தம், உடல் என்பனவும், அவர்களின் கொழுப்பும் மலை போலக் குவிந்து கிடக்க, அம் மலைகளின் மேல் தூடணன் தன் தேரைச் செலுத்தினான் என்பது.

அடுக்கல்: கற்களை அடுக்கினாற் போல இருப்பது: மலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Over towering heaps of elephants, chariots, horses, the crowned heads of the furious,
  2. headless trunks, bodies of demons of his own clan
  3. with many gleaming weapons, and pale white fat,
  4. Tūṭaṇaṉ drove his rumbling chariot fast, and he seethed.

What the poem says

Tūṭaṇaṉ drives his thundering chariot over mountains made of the dead: elephants, chariots, horses, crowned heads, headless bodies, the corpses of his own kinsmen still clutching their weapons, and mounds of white fat.

Seeing his own people piled up like this, he boils with rage.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaḷiṟu, tēr, pari, kaṭuttavar muṭit talai, kavantam,
oḷiṟu pal paṭai, tam kulattu arakkartam uṭalam,
veḷiṟu cēr niṇam, piṟaṅkiya aṭukkaliṉ mītāk
kuḷiṟu tēr kaṭitu ōṭṭiṉaṉ, tūṭaṇaṉ, kotittāṉ.