கம்பராமாயணம் 3113 · ஆரணிய 6.156
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அறம் கொளாதவர் - தருமத்தைக் கைக் கொள்ளாத அரக்கர்களுடைய; ஆக்கைகள் - உடல்கள்; அடுக்கிய அடுக்கல் - ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்ததனாலாகிய மலைகள்; பிறங்கி நீண்டன - உயர்ந்து நீண்டுள்ளவை; கணிப்பு இல - எண்ணிக்கை இல்லாதனவாம்; பெருங்கடு விசையால் - (ஆதலால்) மிகக் கடுமையான வேகத்தால்; கறங்கு போன்று உளது ஆயினும் - காற்றாடி போன்று உள்ளதானாலும்; அத்தேர் - தூடணன் ஏறிய அத்தேர்; பிணப் பெருங்காட்டில் - பிணக்குவியல்களாகிய காட்டிலே; இறங்கும் ஏறும் - பள்ளமான இடங்களில் இறங்கும் மேடான இடங்களில் ஏறும்; (அத்தேர் பட்டது - உற்ற இடர்நிலையை; யாது என இசைப்பாம் - நாம் என்ன வென்று சொல்லுவோம்? (கூறவியலாது).
தூடணனது தேர் எண்ணிக்கையற்ற மலை போன்ற பிணக்குவியல்களில் ஏறியிறங்குதலால் இடறி மிகத் துன்பப்பட்டது என்பது. விரைந்து செல்வதில் தேர்க்குக் காற்றாடி உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The hills piled from the bodies of those who held no dharma
- rose high and stretched on, past counting; though with its great, fierce speed
- it was like a whirling top, in that vast forest of corpses
- it would go down and climb up; how shall we tell what that chariot suffered?
What the poem says
The hills of dead demons, people who never followed dharma, rise high and stretch beyond counting. Tūṭaṇaṉ's chariot is fast as a spinning pinwheel, yet in this forest of corpses it has to lurch down into hollows and climb over mounds.
The poet says he cannot describe how that chariot struggled.