கம்பராமாயணம் 3114 · ஆரணிய 6.157

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரிதின் எய்தினன் ஐயைந்து கொய் உளைப் பரியால்
உருளும் ஆழியது ஒரு தனித் தேரினன் , மேகத்து
இருளின் நீங்கிய இந்துவின் பொலிகின்ற இராமன்
தெருளும் வார் கணைக் கூற்று எதிர் , ஆவி சென்றென்ன .

பொருள் · Meaning in Tamil

(தூடணன் கொய் உளை ஐ ஐந்து பரியால் - அழகாகக் கத்தரிக்கப்பட்ட பிடரி மயிர்களையுடைய இருபத்தைந்து குதிரைகள் பூட்டியதால்; உருளும் ஆழியது - (எளிதில்) உருளும் சக்கரங்களையுடையதான; ஒரு தனித் தேரினன் - ஒப்பற்ற தனித்த தேரையுடையவனாய்; கூற்று எதிர் - யமனுக்கு எதிரிலே; ஆவி சென்று என்ன - உயிர் வலியச் சென்றாற் போல; உலகத்து இருளை - இவ்வுலகிலுள்ள இருட்டை; நீக்கிய இந்துவின் - ஒழிக்கின்ற சந்திரன் போல; பொலிகின்ற இராமன் - விளங்குகின்ற இராமனுடைய; தெருளும் வார்கணை - தெளிவான நீண்ட அம்புக்கு எதிரில்; அரிதின் எய்தினன் - மிகுந்த சிரமப்பட்டு வந்து சேர்ந்தான்.

யமனுக்கு எதிரே அவனால் கவரப்படுவதற்குரிய உயிர் வந்து நின்றாற் போல இராமபிரான் கணைக்கு எதிரே இருபத்தைந்து குதிரைகள் பூட்டிய தனித் தேரையுடைய தூடணன் அரிதின் எய்தினான் என்பது.

இராமனுக்குச் சந்திரன் உவமை - குளிர்ச்சி தந்து உயிர்களை மகிழ்விப்பதால். குறித்த இலக்கைத் தவறாது அழிப்பது பற்றி இராமபாணத்திற்குக் கூற்றுவன் ஒப்பாவான்.

இராமபாணத்தால் இவன் உடனே அழிதற்குக் காரணமாதலால் 'கூற்றெதிர் ஆவி சென்றென்ன' என்றார். 'இருளின் நீங்கிய இந்து' - சூழ்ந்திருந்த அரக்கர் பட்டொழியத் தான் மட்டும் நின்ற இராமபிரானுக்கு உவமையாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With difficulty he arrived, in his single peerless chariot with rolling wheels
  2. drawn by five times five horses with trimmed manes,
  3. before the clear long arrows of Irāmaṉ, who shone like the moon
  4. that drives away the world's darkness, like a life going out to meet Death.

What the poem says

After a hard struggle across the heaps of dead, Tūṭaṇaṉ arrives in his lone chariot drawn by twenty-five horses with clipped manes. He comes before Irāmaṉ's arrows like a life walking up to Death to be taken.

Irāmaṉ shines like the moon that clears away darkness: cool and gladdening to living things, and now standing alone because the demons who surrounded him like darkness are gone. His arrow is compared to Death because it never misses its mark.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aritiṉ eytiṉaṉ aiyaintu koy uḷaip pariyāl
uruḷum āḻiyatu oru taṉit tēriṉaṉ, ulakattu
iruḷai nīkkiya intuviṉ polikiṉṟa irāmaṉ
teruḷum vār kaṇaik kūṟṟu etir, āvi ceṉṟeṉṉa.