கம்பராமாயணம் 3115 · ஆரணிய 6.158

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சென்ற தேரையும் , சிலை உடை மலை எனத் தேர்மேல்
நின்ற தூடணன் தன்னையும் நேருற நோக்கி
'நன்று நன்று நின் நிலை 'என அருள் இறை நயந்தான் ;
என்ற காலத்து , அவ் வெய்யவன் பகழி மூன்று எய்தான் .

பொருள் · Meaning in Tamil

சென்ற தேரையும் - (அவ்வாறு எதிரில்) வந்த தேரையும்; சிலைஉடை மலை என - வில்லையேந்திய ஒரு மலை போல; தேர் மேல் நின்ற - அத் தேரின் மேல் (வில்லேந்தி) நின்ற; தூடணன் தன்னையும் - தூடணனையும்; நெடியவன் நோக்கி - இராமபிரான் பார்த்து; 'நின் நிலை நன்று நன்று' என - (போரில்) உனது உறுதி நிலை மிக நன்றாயிருந்தது' என்று; இறை அருள் நயந்தான் - அவனைச் சிறிது அருளோடு மதித்தான்; என்ற காலத்து - அவ்வாறு கூறிய அச் சமயத்தில்; அவ் வெய்யவன் - அந்தக் கொடியவனான தூடணன்; பகழி மூன்று எய்தான் - மூன்று அம்புகளைத் தொடுத்தான்.

தேரின் மேல் வில்லேந்தியவனாகத் தூடணன் வந்து நிற்க, அவனது தளராத வீரத்தை இராமன் பாராட்டி நிற்கையில் அத் தூடணன் இராமன் மேல் மூன்று கணைகளை விடுத்தான் என்பது.

சிலையுடை மலை - வில்லேந்திய தூடணனுக்கு உவமை: இல்பொருளுவமை. நன்று நன்று - அடுக்கு உவமை பற்றியது. நெடியவன் - எங்கும் வியாபித்த திருமாலாகிய இராமபிரான். தன் பகைவனான தூடணனது வீரத்தைப் பாராட்டிய இராமனது சிறப்பைக் காட்டுவது இது. இறை - சிறிது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking at the chariot that came, and at Tūṭaṇaṉ standing on it
  2. like a mountain holding a bow, the Tall One
  3. said, 'Well done, well done, your stand!', the Lord showing a little grace;
  4. at the moment he said it, that cruel one shot three arrows.

What the poem says

Irāmaṉ, called the Tall One because he is Tirumāl who pervades all things, sees Tūṭaṇaṉ standing in his chariot like a mountain holding a bow, an imagined comparison since no such mountain exists.

Generously, he praises his enemy's courage: 'Well done, well done.' At that very moment Tūṭaṇaṉ looses three arrows at him. The verse shows Irāmaṉ's greatness in honouring a foe's valour.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceṉṟa tēraiyum, cilaiyuṭai malai eṉat tērmēl
niṉṟa tūṭaṇaṉtaṉṉaiyum neṭiyavaṉ nōkki
'naṉṟu naṉṟu niṉ nilai 'eṉa aruḷ iṟai nayantāṉ;
eṉṟa kālattu, av veyyavaṉ pakaḻi mūṉṟu eytāṉ.