கம்பராமாயணம் 3116 · ஆரணிய 6.159

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தூர வட்ட எண் திசைகளைத் தனித்தனி சுமக்கும்
பார எட்டினோடு இரண்டினில் ஒன்று , பார் புரக்கப்
பேர விட்டவன் நுதல் அணி ஓடையில் பிறங்கும்
வீர பட்டத்தில் பட்டன , விண்ணவர் வெருவ .

பொருள் · Meaning in Tamil

தூர - நெடுந்தூரம் நீண்ட; வட்ட - வட்டமாய் அமைந்துள்ள; எண் திசைகளை - எட்டுத் திக்குகளையும்; தனித்தனி சுமக்கும் - தனித்தனியே சுமக்கின்ற; பார எட்டினோடு - வலிய எட்டுத் திசை யானைக ளோடு சேர்ந்த; இரண்டினில் ஒன்று - (பூமியைச் சுமக்கின்ற மற்ற இரண்டான ஆதிசேடன், ஆதி கூர்மம் என்ற) இரண்டனுள் ஒன்றாகிய ஆதிசேடனை; (ஆதிசேட அம்சமான பாதுகைகளை; பார் புரக்க - உலகை ஆட்சிசெய்யுமாறு; பேர விட்டவன் - (அயோத்திக்குத்) திருப்பியனுப்பியவனான இராமபிரானின்; நுதல் அணி - நெற்றியில் அணிந்துள்ள; ஓடையின் பிறங்கும் - (யானையின்) முகபடாம் போல விளங்குகின்ற; வீர பட்டத்தில் - வீர பட்டிகையில்; விண்ணவர் வெருவ - தேவர்களும் அஞ்சும்படி; பட்டன - (அந்த மூன்று அம்புகளும்) தாக்கின.

இராமபிரானது வீரபட்டிகையில் தூடணன் எய்த அம்புகள் பட்டன என்பது. இராமனது நெற்றிப் பட்டிகைக்கு யானையின் நெற்றிப் பட்டத்தை உவமை கூறியதால் இராமன் களிறு போன்றவன் என்பது விளங்கும். எட்டுத் திக்குகளிலுள்ள எட்டு யானைகளும், நடுவில் ஆதி சேடனும் அதன் கீழ் ஆதி கூர்மமுமாக இப்பத்தும் பூமிக்குக் கீழேயிருந்து அதனைத் தாங்குகின்றன என்பது நூற் கொள்கை.

வீரபட்டம் - வெற்றி பெற்ற வீரர் அதற்கு அறிகுறியாக நெற்றியிலணியும் பொன்தகடு.

எட்டு, இரண்டு - எண்ணலளவையாகு பெயர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Of the burden-bearers, the eight who each bear one of the far, round eight directions
  2. together with the two, he who sent one of those two away to guard the earth:
  3. on the hero's band shining on his brow like an elephant's forehead plate,
  4. the arrows struck, so that the gods were afraid.

What the poem says

Tūṭaṇaṉ's three arrows strike the golden hero's band on Irāmaṉ's forehead, and the gods are alarmed.

Irāmaṉ is described through a riddle. In traditional cosmology the earth is held up by ten: the eight elephants of the directions, the serpent Ātiśēṭaṉ at the centre, and the cosmic tortoise beneath. Irāmaṉ sent 'one of the two', Ātiśēṭaṉ, back to rule the land, meaning the sandals he gave Paratan, which are held to be a form of that serpent. His forehead band shines like the plate on an elephant's brow, so he himself is likened to a tusker.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūra vaṭṭa eṇ ticaikaḷait taṉittaṉi cumakkum
pāra eṭṭiṉōṭu iraṇṭiṉil oṉṟu, pār purakkap
pēra viṭṭavaṉ nutal aṇi ōṭaiyiṉ piṟaṅkum
vīra paṭṭattil paṭṭaṉa, viṇṇavar veruva.