கம்பராமாயணம் 3117 · ஆரணிய 6.160

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

'எய்த காலமும்' - (இந்த அரக்கன்) அம்பு எய்த காலமும்; வலியும் - அவனது வலிமையும்; நன்று' என - நல்லன என்று; நினைந்து - எண்ணி; இராமன் - இராமபிரான்; சேய் ஒளி செய்த முறுவலன் - அழகுள்ள ஒளியுடைய புன்னகை பூத்தவனாய்; கடும் கணை தெரிந்தான் - கொடிய பாணங்களை ஆராய்ந்து தொடுத்து (அவற்றால்); அங்கு நொய்தின் - அங்கே விரைவிலே; அவன் - அந்த அரக்கர் படைத்தலைவனான தூடணனது; நொறில் பரித் தேர் - விரைவாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய தேரை; பட நூறி - அழியும்படி சிதைத்து; கையில் வெம்சிலை அறுத்து - அவன் கையிலிருந்த கொடிய வில்லையும் துண்டித்து; ஒளிர் கவசமும் கடிந்தான் - விளங்குகின்ற அவனது கவசத்தையும் பிளந்து அழித்தான். இராமன் தூடணனது செயலைப் பாராட்டியவாறு கடுங்கணைகளைத் தேர்ந்தெடுத்து எய்து அந்த அரக்கர் சேனைத் தலைவனான தூடணனது தேரையும் நிலையையும் சிதைத்துக் கவசத்தையும் அழித்தான் என்பது.

சேயொளி - செம்மை ஒளி அழகைக் குறிக்கும். செய்த முறுவலன் - முறுவல் செய்தவன்: விகுதி பிரித்துக் கூட்டல்.

காலமும் வலியும் நன்று என்றது: படை வீரர்கள் அஞ்சியோடிய போது அஞ்சாது எதிர் சென்று அவர்களைத் தடுத்து நிறுத்திப் போர்க்கு ஏகச் செய்து, தானும் அஞ்சாது எதிர்த்துப் போர் செய்யும் அவனது போர் செய்த நேரத்தையும் வலிமையையும் பாராட்டியது. நொறில் - விரைவு குறித்த உரிச்சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thinking, 'The timing of his shot and his strength are good,' Irāmaṉ,
  2. breaking into a smile of fair radiance, chose fierce arrows;
  3. swiftly, there, he smashed his chariot with its fleet horses,
  4. cut the cruel bow in his hand and split his shining armour too.

What the poem says

Irāmaṉ admires the timing and force of Tūṭaṇaṉ's shot: this is the demon who rallied his fleeing troops and stood his ground himself. Smiling, Irāmaṉ picks out fierce arrows.

In a moment he wrecks Tūṭaṇaṉ's chariot with its swift horses, cuts the bow in his hand and tears open his gleaming armour.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eyta kālamum valiyum naṉṟu 'eṉa niṉaintu, irāmaṉ,
ceyta cēyoḷi muṟuvalaṉ, kaṭuṅ kaṇai terintāṉ;
noytiṉ aṅku avaṉ noṟil parit tēr paṭa nūṟi
kaiyil veñ cilai aṟuttu, oḷir kavacamum kaṭintāṉ.