கம்பராமாயணம் 3118 · ஆரணிய 6.161

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேவர் ஆர்த்து எழ - தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரம் செய்யவும்; முனிவர்கள் திசைதொறும் சிலம்பும் - முனிவர்கள் எல்லாத் திக்குகளிலும் நின்று ஆரவாரத்தோடு கூறுகின்ற; ஓவு இல் வாழ்த்து ஒலி - ஒழிவில்லாத வாழ்த்துகளின் ஓசை; கார்க் கடல் முழக்கு என ஓங்க - கரிய கடலின் முழக்கம் போல மிகுந்து விளங்கவும்; 'நீ வல்லையேல் இது கா அடா' என - 'நீ வல்லமையுள்ளவனானால் இந்த அம்பைத் தடுத்து உன்னைக் காத்துக் கொள்ளடா' என்று வீரவாதம் கூறி; கணை ஒன்று ஏவினான் - இராமபிரான் ஓர் அம்பைத் தொடுத்தான்; அவன் - அந்த அரக்கனான தூடணனும்; எயிறு உடை நெடுந்தலை இழந்தான் - கோர தந்தங்களையுடைய தன் பெரிய தலையை இழந்தான்.

கார்க் கடல் முழக்கு: நாற்றிசையிலும் நின்று நான்கு வேத மந்திரங்களைக் கொண்டு ஆசி கூறும் பேரொலிக்குக் கார்க் கடல் முழக்கு உவமையாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the gods rose up shouting, and the ceaseless sound of blessings
  2. the sages raised in every quarter swelled like the roar of the dark sea,
  3. saying, 'Ward this off, fellow, if you can!'
  4. he shot one arrow; and the other lost his great, fanged head.

What the poem says

The gods cheer, and the sages in every direction chant blessings from the four Vētas, their voices rising like the roar of the dark ocean.

Irāmaṉ calls out a challenge: 'Stop this one, fellow, if you are able!' He looses a single arrow, and Tūṭaṇaṉ's huge fanged head is cut off.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvar ārttu eḻa, muṉivarkaḷ ticaitoṟum cilampum
ōvu il vāḻttu oli kārk kaṭal muḻakku eṉa ōṅka
'kā aṭā! itu, vallaiyēl nī 'eṉak kaṇai oṉṟu
ēviṉāṉ; avaṉ, eyiṟuṭai neṭun talai iḻantāṉ.