கம்பராமாயணம் 3119 · ஆரணிய 6.162

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தம்பி தலையற்றபடியும் , தயரதன் சேய்
அம்பு படையைத் துணிபடுத்ததும் , அறிந்தான் ;
வெம்பு படை விற்கை விசயக் கரன் வெகுண்டான் ;
கொம்புதலை கட்டிய கொலைக்கரி கடுப்பான் .

பொருள் · Meaning in Tamil

கொம்பு தலை கட்டிய - தந்தங்கள் முகத்தில் உறுதியாக விளங்குகின்ற; கொலைக் கரியோடு ஒப்பான் - கொல்லுதலில் வல்ல யானை போன்றவனான; வெம்பு படை வில் கை விசயக் கரன் - உக்கிரமான பல வகைப் படைக்கலங்களையும் வில்லையும் ஏந்திய கைகளையும், வெற்றியையுமுடைய கரன்; தம்பி தலை அற்றபடியும் - தன் தம்பியான தூடணன் (இராமனது அம்பால்) தலை அறுபட்டு அழிந்ததையும்; தயரதன் சேய் அம்பு - தசரதனின் மைந்தனான இராமனது பாணம்; படையைத் துணி படுத்ததும் - தன் அரக்கப் படைகளை வெட்டித் துண்டாடியதையும்; அறிந்தான் - அறிந்து; வெகுண்டான் - சினங் கொண்டான்.

இராமபிரானால் தூடணன் தலையறுபட்டதையும், அரக்கச் சேனை துண்டு பட்டதையும் அறிந்து, கரன் வெகுண்டான் என்பது.

'கொம்பு தலை கட்டிய' - கரனது முகத்தில் வெளிப்பட்டுக் காணப்படுகின்ற கோர தந்தங்கள் யானைத் தந்தம் போல்வன என்பது விளங்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He learned how his younger brother's head had been cut off, and how the arrows of Tacarataṉ's son
  2. had hacked his army to pieces;
  3. Karaṉ, victorious, with cruel weapons and a bow in his hand, grew furious,
  4. he who was like a killer elephant with tusks set firm in its head.

What the poem says

Karaṉ, the demon general who commands this whole army and is Cūrppaṇakai's brother, learns that his younger brother Tūṭaṇaṉ has been beheaded and that the arrows of Tacarataṉ's son have cut his army to pieces.

He flies into a rage. He holds a bow and many fierce weapons, and the terrible fangs jutting from his face make him look like a killer elephant with its tusks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tampi talai aṟṟa paṭiyum, tayarataṉ cēy
ampu paṭaiyait tuṇipaṭuttatum, aṟintāṉ;
vempu paṭai viṟ kai vicayak karaṉ vekuṇṭāṉ;
kompu talai kaṭṭiya kolaik kariyoṭu oppāṉ.