கம்பராமாயணம் 3120 · ஆரணிய 6.163
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அந்தகனும் உட்கிட - (கோபங்கொண்ட கரன் யமனும் அஞ்சும்படி; அரக்கர் கடலோடும் - இராக்கதர் படையுடனே; சிந்துரம் - யானைகளையும்; வயப் புரவி - வலிய குதிரைகளையும்; தேர் - தேர்களையும்; திசை பரப்பி - எல்லாத் திசைகளிலும் பரவியிருக்கச் செய்து; இந்துவை வளைக்கும் - சந்திரனை வளைத்துக் கொண்ட; எழிலிக் குலம் என - மேகக் கூட்டங்கள் போல; தான் வந்து - அரக்கனாகிய கரன் வந்து; வரி விற் கை மத யானையை - கட்டமைந்த வில்லையேந்திய கையையுடைய மதயானை போன்ற இராமபிரானை; வளைத்தான் - சூழ்ந்து கொண்டான்.
அரக்கனான கரன் நான்கு வகைச் சேனைகளையும் கொண்டு இராமபிரானை வளைத்தான் என்பது.
இராமனுக்குச் சந்திரனும், அரக்கர் கூட்டத்திற்கு மேகக் கூட்டமும் உவமை. வரி விற்கை மத யானை - இல்பொருளுவமை. எழிலி - மேகம் கடல், யானை: உவமையாகுபெயர்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that even Death quailed, with his sea of demons
- he spread elephants, mighty horses and chariots across the quarters,
- and like a mass of clouds closing round the moon he came
- and surrounded the rutting elephant with the banded bow in its hand.
What the poem says
Karaṉ advances with his remaining ocean of demons, spreading elephants, horses and chariots in every direction, so fearsome that even Death is afraid.
His forces close around Irāmaṉ as banks of cloud close around the moon. Irāmaṉ is also pictured as a rutting elephant holding a bow, an impossible creature the poet invents for the comparison.