கம்பராமாயணம் 3121 · ஆரணிய 6.164

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அடங்கல் இல் - கட்டுக்கடங்காத; கொடுந் தொழில் அரக்கர் - கொடிய செயல்களையுடைய இராக்கதர்கள்; அவ் அனந்தன் படம் கிழிதர - அந்த ஆதிசேடனது படம் கிழிந்துவிடும்படி; படிதனில் - பூமியில்; கடம் கலுழ் தடங் களிறு - மத நீர் பொழியும் பெரிய யானைகளையும்; தேர் பரி - தேர்களையும் குதிரைகளையும்; கடாவி - மிகுதியாகச் செலுத்தி; பல விதப் போர் தொடங்கினர் - பல வகைப்பட்ட போரைச் செய்யத் தொடங்கினார்கள்; நெடுந் தகையும் - பண்பால் சிறந்த இராமபிரானும்; வெங் கணை துரந்தான் - கொடிய அம்புகளை விரைவாக எய்தான்.

அரக்கர் அடங்காமல் சேனைகளோடு மீண்டும் போர் தொடங்க, இராமபிரானும் கொடிய கணைகளை ஏவினான் என்பது. 'அவ் அனந்தன் படம் கிழிதர' என்றது படைகள் யாவும் ஓரிடத்தே ஒருங்கே திரண்ட பார மிகுதி பற்றி. கடம்: கன்னம் இங்கே - மதநீர்க்கு இடவாகு பெயர். நெடுந்தகை: பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demons of unbridled, cruel deeds, so that the hoods of that Ananta
  2. were torn, on the earth began many kinds of battle,
  3. driving on huge elephants streaming must, chariots and horses;
  4. and the noble one too sped his cruel arrows.

What the poem says

The unruly demons drive their must-streaming elephants, chariots and horses into a battle of every kind. Their combined weight is so great that the earth presses down until the hoods of Anantaṉ, the serpent who holds it up, almost tear.

Irāmaṉ, great in character, answers with a rain of fierce arrows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭaṅkal il koṭun toḻil arakkar, av aṉantaṉ
paṭam kiḻitarap paṭitaṉil palavitap pōr,
kaṭam kaluḻ taṭaṅ kaḷiṟu tēr pari kaṭāvi
toṭaṅkiṉar, neṭuntakaiyum veṅ kaṇai turantāṉ.