கம்பராமாயணம் 3122 · ஆரணிய 6.165

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கடக் கரி - மதயானைகள்; துடித்தன - (இராமபாணங்களால்) பதைத்து விழுந்தன; பரித்தேர் - குதிரைகள் பூட்டப் பெற்ற தேர்கள்; துடித்தன - துள்ளித் துடித்துக் கீழே விழுந்தன; முடித்தலை துடித்தன - பொன் முடியணிந்த தலைகள் பதறி விழுந்தன; தொடித் தோள் - தொடியென்னும் வளைகள் பூண்ட அரக்கரின் தோள்கள்; துடித்தன - துடித்தன; மணிக் குடர் துடித்தன - அன்னவரின் சிறுகுடல்களும் துடித்தன; தசைத் தோல் துடித்தன - தசையோடு பொருந்திய தோல்களும் துடித்தன; கழல் துணை துடித்தன - இரண்டு கால்களும் துடித்தன; இடத் தோள் துடித்தன - இடப் புறத்துத் தோள்களும் துடித்தன.

தேர்துடித்தல் - தேர்துள்ளிக் கீழே விழுந்ததைக் குறிக்கிறது - முறிந்து விழுதல். இடத்தோள் துடித்தன - சாகாத அரக்கர்களின் இடத்தோள் துடித்தன - ஆடவர்க்கு இடத்தோள் துடித்தல் தீ நிமித்தமாம்.

சொற்பொருட் பின்வருநிலையணி - துடித்தன: பன்முறை ஒரேபொருளில் அடுக்கி வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The rutting elephants writhed; the horse-drawn chariots writhed;
  2. the crowned heads writhed; the bangled arms writhed;
  3. the jewel-like entrails writhed; the flesh and skin writhed;
  4. the pairs of anklet-bound legs writhed; and the left shoulders twitched.

What the poem says

One verb, 'writhed' or 'twitched', is repeated eight times as Irāmaṉ's arrows strike: elephants, chariots, crowned heads, bangled arms, entrails, skin and legs all quiver as they fall.

The last item is different. The left shoulders of the demons still alive twitch, and for a man a twitching left shoulder is a bad omen: they too are doomed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuṭittaṉa kaṭak kari, tuṭittaṉa parit tēr,
tuṭittaṉa muṭit talai, tuṭittaṉa toṭit tōḷ,
tuṭittaṉa maṇik kuṭar, tuṭittaṉa tacait tōl
tuṭittaṉa kaḻal tuṇai, tuṭittaṉa iṭat tōḷ.