கம்பராமாயணம் 3142 · ஆரணிய 6.185

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வரம் படைத்தலின் - வரங்கள் பெற்றுள்ளமையாலும்; மாயையின் - மாயைகளைக் கொண்டுள்ளமையாலும்; உரம் உடைத் தன்மையால் - வலிமையைப் பெற்றுள்ளமையாலும்; அரக்கன் - அரக்கனான இராவணன்; உலகு ஏழையும் - ஏழுலகத்து உயிர்களையும்; பரம் முருக்கிய - மிகுதியாக அழித்த; பாவத்தினால் - தீவினையால்; கரன் வலக்கரம் என - கரன் முன்பு வலக்கை துணிக்கப்பட்டது போல; கண்டம் உற்றான் - இப்பொழுது தனது கழுத்தறுபட்டான்.

அரோ - ஈற்றசை. மிகப் பெருஞ் சேனைக்குத் தலைவனாய் மிக்க வலியவனாக இராவணனுக்குத் தம்பி முறையில் நின்ற கரன் அழிந்தது இராவணனின் மிக்க வருத்தத்துக்கும் வலிமைக் குறைவிற்கும் காரணமாதலைக் கொண்டு வர பலமும், மாயா பலமும், உடல் வலிமையும் ஆகிய இவ் வலிமைகளால் இராவணன் எல்லாவுலகத்தையும் நலிந்த தீவினையால் கரன் அழிந்தான் என்றார். கழுத்து அறுபட்டதற்குக் கையறுபட்டதையுவமை கூறினார். கரன் இராவணனுக்கு வலக்கரம் போன்றவன் என்று குறிப்பு நயம் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the demon had won boons, because of the strength
  2. of his sorcery and his might, and for the sin
  3. of utterly crushing all seven worlds, like his right hand
  4. Karaṉ too was cut through at the throat.

What the poem says

Karaṉ's head is cut off, just as his right arm was. The poet blames the sins of Irāvaṇaṉ: armed with boons, sorcery and brute strength, Irāvaṇaṉ has tormented all seven worlds, and that evil now falls on his kinsman.

There is a further hint. Karaṉ, commander of a vast army and a brother to Irāvaṇaṉ, was like Irāvaṇaṉ's right hand. In losing him, Irāvaṇaṉ too has lost his right hand, a heavy blow to his grief and his strength.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1varam arakkaṉ paṭaittaliṉ, māyaiyiṉ
uramuṭait taṉmaiyāl, ulaku ēḻaiyum
param murukkiya pāvattiṉāl, valak
karam eṉak karaṉ kaṇṭam uṟṟāṉ arō.