கம்பராமாயணம் 3143 · ஆரணிய 6.186

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆர்த்து எழுந்தனர் , ஆடினர் , பாடினர் ,
தூர்த்து அமைந்தனர் வானவர் தூமலர் ;
த்தனும் பொலிந்தான் , கதிரோன் திசை
போர்த்த மென் பனி போக்கியது என்னவே .

பொருள் · Meaning in Tamil

(அப்பொழுது) வானவர் - தேவர்கள்; ஆர்த்து எழுந்தனர் - ஆரவாரஞ் செய்து எழுந்து; ஆடினர் பாடினர் - ஆடிப் பாடிக் கொண்டு; தூய்மலர் தூர்த்து - தூய்மையான கற்பக மலர்களை (இராமன் மேல்) பொழிந்து; அமைந்தனர் - நின்றார்கள்; தீர்த்தனும் - தூயவனான இராமபிரானும்; திசை போர்த்த - திசையெங்கும் மூடிய; மென் பனி - மென்மையான பனியை; கதிரோன் - சூரியன்; போக்கியது என்ன - போக்கி விளங்கியது போல; பொலிந்தான் - (பகையழித்து) விளங்கினான்.

கதிரவன் திசையெங்கும் கவிந்த பனியைப் போக்குவது போல இராமன் தன்னைச் சூழ்ந்த அரக்கர் கூட்டத்தை எளிதில் விரைவிலே அழித்தான் என்பது. இதில் இராமனைக் கதிரவனாகவும் போரில் சூழ்ந்திருந்த அரக்கர்களை மென்பனியாகவும் உவமித்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods rose up shouting, they danced, they sang,
  2. they showered pure flowers until they were spent;
  3. and the Holy One shone, as the sun shines
  4. when it has driven off the soft mist that shrouded the quarters.

What the poem says

The battle is over. The gods shout, dance and sing, and shower heavenly flowers over Irāmaṉ.

He, the Pure One, shines like the sun after it has burned away the soft mist that covered every direction. The demons who surrounded him are the mist, and he has cleared them away as easily as sunlight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārttu eḻuntaṉar, āṭiṉar, pāṭiṉar,
tūrttu amaintaṉar vāṉavar tūy malar;
tīrttaṉum polintāṉ, katirōṉ ticai
pōrtta meṉ paṉi pōkkiyatu eṉṉavē.