கம்பராமாயணம் 3144 · ஆரணிய 6.187

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முனிவர் - முனிவர்கள் பலர்; முறை முறை வந்து - மேன் மேலும் வரிசை வரிசையாக வந்து; மொய்ப்புற - நெருங்கிச் சூழ்ந்து கொள்ள; இனிய சிந்தை இராமனும் - நல்ல மனத்தையுடைய இராமனும்; அனிக வெஞ் சமத்து - அரக்கப் படைகளோடு செய்யும் கொடிய போரில்; ஆர் உயிர் போக - தன் அரிய உயிர் நீங்கிச் செல்ல; தான் தனி இருந்த - தனித்து (உயிரில்லாமல்) கிடந்த; உடல் அன்ன தையல்பால் - உடம்பையொத்த சீதையின் இடத்திற்கு; ஏகினான் - சென்றான். இராமன் அரக்கரோடு போர் செய்வதற்குப் பிரிந்து செல்லத் தான் பர்ண சாலையில் தனியேயிருந்த சீதைக்கு, உயிர் போகத் தனித்துக் கிடந்த உடம்பை உவமை கூறினார். இதனால் உயிர்க் காதலன் ஆன இராமனிடம் சீதைக்குள்ள அன்பு மிகுதி புலனாகும். இராமனை உயிராகவும் பிராட்டியை உடலாகவும் கம்பர் பல இடங்களில் குறிக்கும் இயல்பினர். (1249, 3473, 10009)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the sages came crowding round, rank upon rank,
  2. Irāmaṉ of the gentle heart went
  3. to the lady who was like a body left alone
  4. when its precious life had gone off to the cruel battle with the host.

What the poem says

With sages pressing round him in rank after rank, Irāmaṉ goes back to Cītai at their leaf hut.

While he was away fighting the demon army, she was like a body left lifeless, its life gone off to battle. Kampaṉ often speaks of Irāmaṉ as Cītai's life and of her as his body, a sign of how completely her being depends on him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṉivar vantu muṟai muṟai moyppuṟa,
iṉiya cintai irāmaṉum, ēkiṉāṉ;
aṉika veñ camattu ār uyir pōkat tāṉ
taṉi irunta uṭal aṉṉa taiyalpāl.