கம்பராமாயணம் 3145 · ஆரணிய 6.188
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விண்ணில் நீங்கிய - போரில் இறந்து வீரசுவர்க்கம் அடைந்த; வெய்யவர் மேனியில் - கொடிய அரக்கர்களின் உடலில் ஏற்பட்ட; புண்ணின் நீரும் - புண்களிலிருந்து வந்த இரத்தமும்; பொடிகளும் - (அந்தப் போர்க் களத்திலுள்ள) தூசிகளும்; போய் உக - நீங்கிவிடும்படி; அண்ணல் வீரனை - பெருமை மிக்க வீரனாகிய இராமபிரானை; தம்பியும் அன்னமும் - இலக்குவனும் சீதையும்; கண்ணின் நீரினால் - (தங்கள்) கண்ணீரால்; பாதம் கழுவினார் - திருவடிகளைக் கழுவினார்கள்.
இராமன் மீண்டு வருகையில் இலக்குவனும் சீதையும் அவ் இராமனின் திருவடிகளில் விழுந்து வணங்கும்போது அவர் தம் கண்களிலிருந்து பெருகிய ஆனந்தக் கண்ணீர் அத் திருவடிகளில் வழிந்தமை அரக்கரின் இரத்தமும் போர்க்களப் புழுதியும் அத் திருவடிகளில் படிந்திருந்தவற்றை நீர் கொண்டு கழுவுதல் போலுமென்பது தற்குறிப்பேற்றவணி. அன்னம்: உவமவாகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the blood from the wounds and the dust from the bodies
- of the cruel ones who had gone off to heaven might be washed away,
- his brother and the swan-like lady washed the feet
- of the noble hero with the water of their eyes.
What the poem says
Ilakkuvaṉ and Cītai, the 'swan', fall at Irāmaṉ's feet as he returns. Their tears of joy run down over his feet.
The poet imagines a purpose for those tears: they wash away the blood of the demons, now gone to heaven, and the dust of the battlefield that had settled there.