கம்பராமாயணம் 3149 · ஆரணிய 6.192
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அலங்கல் வேற் கை அரக்கரை - வெற்றி மாலையணிந்த வேலைக் கையிலே கொண்ட அரக்கர்களை; குலங்கள் ஆசு அற வேர் அறுப்பான் - குலங்கள் அடியோடு ஒழிய வேரறுக்கும் பொருட்டு; குறித்தாள் - எண்ணினவளாய் (சூர்ப்பணகை); உயிர் கலங்கு வன் போர் சூறை நெடுங் கால் என - உலகத்து உயிர்கள் கலங்கியழிதற்குக் காரணமான வன்மையாகத் தாக்கும் பெரிய சூறாவளியைப் போல; நொய்தின் சென்று - விரைவாகச் சென்று; இலங்கை மா நகர் எய்தினாள் - இலங்கை மாநகரை அடைந்தாள். சூர்ப்பணகை இலங்கை சென்று, சீதையைத் தான் கவரத் தொடங்கியது முதல் கரன் முதலியோர் சேனையோடும் மடிந்தமை ஈறாகவுள்ள செய்திகளைக் கூறுதல் - உடனே இராவணன் வந்து சீதையையெடுத்துப் போதற்கும் அது இராவணன் முதலான அரக்கர்களின் நாசத்திற்கும் காரணமாதல் பற்றி இவள் சென்று செய்தி கூறக் கருதுவதை மற்றை யரக்கரையும் அழிக்கக் கருதியதாக நினைந்து, 'அரக்கரை ஆசறக் குலங்கள் வேரறுப்பான் குறித்தாள்' என்றார். தற்குறிப்பேற்ற வணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Intent on rooting out completely the clans
- of the demons with garlanded spears in their hands,
- like a great, fierce, battering whirlwind that throws all life into turmoil,
- she swiftly went and reached the great city of Ilaṅkai.
What the poem says
Cūrppaṇakai rushes to Ilaṅkai like a violent whirlwind that throws all living things into confusion.
The poet says she goes 'intending to destroy the demon race root and branch'. She means only to report what happened, but her news will lead Irāvaṇaṉ to carry off Cītai, and that will bring about the ruin of Irāvaṇaṉ and his whole race. So the poet ascribes to her the purpose that her journey will in fact achieve.