கம்பராமாயணம் 315 · பால 6.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உரை செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி - இவ்வாறு விசுவாமித்திரன் தன்னைப் புகழ்ந்து பேசியபோது, தயரதன் அம்முனிவரது முகத்தைப் பார்த்து; உள்ளத்துள் ஒருவராலும் கரை செய்ய அரியதொரு - தனது உள்ளத்திலே எவராலும் அளத்தற்கு இயலாததாகிய ஒரு; பேர் உவகைக் கடல் பெருக - பெரிய மகிழ்ச்சி என்னும் கடல் பெருகவும்; கரங்கள் கூப்பி - தனது இரு கைகளையும் குவித்து (முனிவனை வணங்கி); அரசு எய்தி இருந்த பலன் எய்தினன் - எனது ஆட்சியை அடைந்ததன் பயனை இன்று நான் அடைந்தேன்; மற்று இனிச் செய்வது அருளுக என்று - இனி நான் என்ன செய்யவேண்டும் என்பதை அருள்வீராக என்று; முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய - முரசுகள் முழங்கும் வாயிலை உடைய தயரதன் முன்னர் எடுத்தியம்ப; ஆங்கே பின்மொழியும் முனிவன் - அப்போதே விசுவாமித்திர முனிவன் பின் கூறுவானாயினான்.
உரை செய்தல்: பேசுதல். அளவு: இங்குப் பொழுது குறித்தது. உவகை: களிப்பு. கூப்பி: குவித்து. அரசு, முரசு என்பன எதுகை நோக்கி அரைசு, முரைசு என நின்றன. எய்தி: அடைந்து. எய்து: பகுதி. மற்று: வினைமாற்றுப் பொருளில் வந்தது. அருளுக: வியங்கோள். கடைத்தலை: தலைக்கடை என்பது மொழிமாறி நின்றது. முன்னே மன்னன் மொழியப் பின்னே முனிவன் மொழிந்தான் என்பது கருத்து. 'உவகைக் கடல்' என்பதற்கேற்பக் கரை செய்ய அரியது என்றார். 'முன்மொழியப் பின் மொழியும்' என்பது முரண்தொடை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he had spoken, looking at his face, as within his heart
- a great ocean of joy that no one could set bounds to swelled up, he joined his hands:
- 'I have gained the fruit of having held the kingship; now tell me what I must do,'
- so spoke first he at whose gate drums sound, and then the sage spoke there.
What the poem says
Overjoyed at the sage's praise, Tacarataṉ says that his reign has now borne fruit, and asks what the sage wishes him to do.
The poet plays on 'spoke first' and 'spoke after' (muṉ moḻiya, piṉ moḻiyum), a figure of contrast.