கம்பராமாயணம் 316 · பால 6.10

Section பால காண்டம் / 6. கையடைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"தரு வனத்துள் யான் இயற்றும் தவ வேள்விக்கு இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்காவண்ணம்
செரு முகத்து காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி” என உயிர் இரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்.

பொருள் · Meaning in Tamil

தருவனத்துள் யான் இயற்றும் - மரங்கள் நிறைந்துள்ள காட்டில் நான் செய்கின்ற; தவவேள்விக்கு இடையூறா - பெரிய யாகத்துக்கு இடையூறாக; தவம் செய்வோர்கள் வெருவர - தவம் செய்பவர்கள் அஞ்சும்படியாக; சென்று அடைகாம வெகுளி என - அவர்தம் மனத்தைச் சென்று சேர்ந்த காமம், வெகுளி, மயக்கங்களைப் போல; நிருதர் இடைவிலக்காவண்ணம் - அரக்கர்கள் கெடுக்காதபடி; செருமுகத்துக் காத்தி என - அவர்களோடு செய்யும் போர் முகத்திலே காத்தருள் வாயாக என; நின் சிறுவர் நால்வரினும் - உன்புத்திரர்கள் நால்வர்களுள்; கரிய செம்மல் ஒருவனை - கருமை நிறம் பொருந்திய செம்மலாகிய ஒப்பற்றவனை; தந்திடுதி என - அளித்திடுவாயாக என்று; உயிர் இரக்கும் கொடும் கூற்றின் - உயிரைத் தாவெனக் கேட்கும் கொடிய கூற்றுவனைப் போல; உளையச் சொன்னான் - மன்னன் மனம் வருந்தும்படி முனிவன் கூறினான்.

'தருவனம்' - மரங்கள் அடர்ந்த வனம். தவவேள்வி - நிஷ்காம்ய வேள்வி என்பர். இடையூறு: தீமை. “ஊறு” முதல்நிலை திரிந்த தொழிற் பெயர். செருமுகம்: போர்முனை. காத்தி: ஏவலொருமை வினைமுற்று. இரத்தல்: யாசித்தல். கொடும் கூற்று: கொடிய கூற்றுவன் (எமன்). கொடிய சொல் எனவும் கொள்ளலாம். உளைதல்: மனம் வருந்துதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'So that the rākṣasas do not obstruct the worthy sacrifice I perform in the forest of trees,
  2. coming as lust and anger come to frighten those who do penance,
  3. protect it at the front of battle: of your four sons, the dark
  4. noble one, give me him,' he said, piercing the king like cruel Death demanding a life.

What the poem says

Vicuvāmittiraṉ makes his request: Irāmaṉ, the dark-skinned eldest, must come and guard his sacrifice from the rākṣasas who disrupt it. The demons attack the sacrifice just as lust and anger attack ascetics.

To Tacarataṉ the words come like Death, Kūṟṟu, demanding his life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"taruvaṉattuḷ yāṉ iyaṟṟum takai vēḷvikku iṭaiyūṟā, tavam ceyvōrkaḷ
veruvarac ceṉṟu aṭai kāma vekuḷi eṉa nirutar iṭai vilakkā vaṇṇam
cerumukattuk kātti eṉa niṉ ciṟuvar nālvariṉum kariya cemmal
oruvaṉait tantiṭuti” eṉa uyir irakkum koṭuṅ kūṟṟiṉ uḷaiyac coṉṉāṉ.