கம்பராமாயணம் 317 · பால 6.11

Section பால காண்டம் / 6. கையடைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண்இலா அருந்தவத்தோன் - எண்ண முடியாத அரிய தவத்தைச் செய்த விசுவாமித்திரர்; இயம்பிய சொல் - சொன்ன இந்தச் சொற்களானது; மருமத்தின் எறிவேல் பாய்ந்த - மார்பின் மேல் எறிந்த வேல் பாய்ந்த; புண்ணில் ஆம் பெரும் புழையில் - புண்ணாகிய புழையிலே; கனல் நுழைந்தால் என - கனன்று கொண்டிருக்கும் தீ நுழைந்தது போல; செவியில் புகுதலோடும் - தனது காதுகளில் புகுந்த போது; உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த - உள்ளத்திலே நிலைத்துள்ள துயரம் (உயிரை) வெளியே தள்ள; ஆர் உயிர் நின்று ஊசல் ஆட - தயரதனது அவ்வரிய உயிர் (உள்ளே போகவும், வெளியே வரவுமாக) ஊசல்போல் ஆட; கண்இலான் பெற்று இழந்தான் என - கண்கள் இல்லாதவன் அதனைப் பெற்றுப் பின்னர் இழந்தான் எனக் கூறும்படி; காலவேலான் கடுந்துயரம் உழந்தான் - பகைவனின் உயிருக்கு இறுதிக்காலம் காட்டும் வேலையுடைய தயரத வேந்தன் கடுமையான துன்பத்தினாலே மிக வருந்தினான்.

உள் நிலாவிய துயரமாவது தயரதன் சரவணனை அம்பால் கொல்ல அவனது பெற்றோர் தந்த சாபத்தால் நிலவிய துன்பமாம். உந்த: தள்ள. கண் இலான்: பிறவிக்குருடன். இடையில் கண் பெற்றும் மீண்டும் இழத்தல் பெருந்துயர் விளைவிக்கும். பிள்ளையில்லாத தயரதன் பெற்றுப் பிரிவதால் பெருந்துயர் கொண்டான் என்பதற்கு உவமையாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The words spoken by the sage of countless rare austerities, as they entered his ears
  2. like fire entering the great hollow of a wound where a hurled spear had pierced the chest,
  3. the grief that dwelt within him seized and thrust at his precious life, which hung swinging;
  4. like a blind man who gains sight and loses it again, the king of the deadly spear suffered bitter grief.

What the poem says

The sage's words strike Tacarataṉ like fire poured into an open spear wound. His life swings back and forth in his body.

The 'grief within' is the curse laid on him long ago by the parents of the boy he killed by mistake with an arrow, that he too would die grieving for a son. He is like a blind man who gains sight and then loses it: having at last got a son, he is to lose him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṇ ilā arun tavattōṉ iyampiya col, marumattiṉ eṟi vēl pāynta
puṇṇil ām perum puḻaiyil kaṉal nuḻaintāleṉac ceviyil pukutalōṭum,
uḷ nilāviya tuyaram piṭittu unta ār uyir niṉṟu ūcalāṭa,
kaṇ ilāṉ peṟṟu iḻantāṉ eṉa uḻantāṉ kaṭun tuyaram kāla vēlāṉ.