கம்பராமாயணம் 318 · பால 6.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தொடை ஊற்றின் தேன் துளிக்கும் - தொடையின் ஊற்றுப் போலத் தேன் துளிக்கின்ற; நறுந்தாரான் ஒரு வண்ணம் துயரம் நீங்கி - மணம் பொருந்திய மாலையணிந்த தயரதன் ஒருவாறு துயரம் நீங்கியவனாய்; படை ஊற்றம் இலன் சிறியன் இவன் - படைக்கலப் பயிற்சியில் முதிர்ச்சி அடையாத சிறுவயதுடையவன் இவ்விராமன்; பெரியோய் - தவத்திலும், மற்றைய சிறப்புக்களிலும் பெரியோரே!; பணி இதுவேல் - எனக்குத் தாங்கள் இடும் கட்டளை இதுவேயானால்; பனிநீர்க் கங்கைபுடை ஊற்றும் சடையானும் - குளிர்ந்த நீரையுடைய கங்கை பக்கங்களில் ஊற்றிக் கொண்டிருக்கும் சடைமுடியையுடைய சிவபிரானும்; நான்முகனும் புரந்தரனும் - நான்கு முகங்களை உடைய பிரமனும் இந்திரனும்; புகுந்து செய்யும் இடையூற்றுக்கு - அவ்வரக்கர்களுக்குத் துணையாக வந்து புகுந்து செய்கின்ற தீங்குகளுக்கு; இடையூறா நான் காப்பென் - தடையாக நின்று நான் காக்கிறேன்; பெரு வேள்விக்கு எழுக என்றான் - (நீங்கள் செய்யத் தொடங்கிய அந்தப்) பெரிய வேள்வியை நிறைவேற்ற இப்போதே எழுந்தருள்க என்றான்.
அன்றலர்ந்த மலர் மாலை அணிந்திருக்கிறான் ஆதலின், அம்மாலை தேனைத் துளிக்கிறது என்பார், “தொடையூற்றின் தேன் துளிக்கும் நறுந்தாரான்” என்றார். ஊற்றுதல்: கொட்டுதல். தொடை: தேன் கூடு. துளித்தல்: சொட்டுதல். தார்: மாலை. நறுந்தார்: பண்புத்தொகை. பணித்தல்: கட்டளையிடுதல். பணி: கட்டளை. முதல்நிலைத் தொழிற்பெயர். பனி: குளிர்ச்சி. புடை: பக்கம். சடை: மயிர்த்தொகுதி. 'இடையூற்றுக்கும்' என்பதில் உம்மை தொகுக்கப்பட்டு 'இடையூற்றுக்கு' என நின்றது. காப்பென்: தன்மை ஒருமை வினைமுற்று. எழுக: வியங்கோள் வினைமுற்று. ஊற்றம்: முதிர்ச்சி. “படை ஊற்றம் இலன்”: படைக்கலப் பயிற்சியால் முதிர்ச்சி அடையாத சிறு வயதினன் என்பது குறிப்பு. “கங்கை புடையூற்றும் சடையான்” கருத்துடையடை கொளணியாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The king of the fragrant garland that drips honey as from a comb, his grief somewhat eased,
- said: 'He has no mastery of weapons; he is small. Great one, if this is your command,
- then against the obstacles that he with the matted locks from which the cold Gaṅgā pours, Purantaraṉ and the four-faced one
- might bring, I will be an obstacle; I will guard your great sacrifice; let us go.'
What the poem says
Recovering a little, Tacarataṉ pleads that Irāmaṉ is only a boy, untrained in war, and offers to guard the sacrifice himself. He would stand against the rākṣasas even if Śiva, with the Gaṅgā flowing from his hair, Intiraṉ and Brahmā came to help them.
His garland is so fresh that honey still drips from it as from a honeycomb.