கம்பராமாயணம் 3152 · ஆரணிய 7.3

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேவரின் - தேவர்களுக்குள்ளே; புலியின் அதள் உடையானும் - புலியின் தோலை ஆடையாக உடுத்த சிவபெருமானும்; பொன்னாடை புனைந்தானும் - பொன் மயமான பீதாம்பரத்தை அணிந்துள்ள திருமாலும்; பூவினானும் - உந்தித் தாமரையில் வசிக்கும் பிரமனும்; நலியும் வலத்தார் அல்லர் - (இராவணனை) வருத்தும் வலிமையுடையவர் ஆகமாட்டார்; இங்கு - இவ்வுலகத்தில்; இனி யாவர் நாட்டல் ஆவார் - இனிமேல் வேறு எவர் (இராவணனை வெல்லுதற்குக் குறித்தவர் ஆவார்! (எவரும் இல்லை), மேலும்; மெலியும் இடை - மெல்லியதாய் விளங்கும் இடையும்; தடிக்கும் முலை - பருத்துத் தோன்றும் மார்பகங்களையும்; வேய் இளந்தோள் - மூங்கிலுக்கு நிகரான இளம் தோள்களையும்; சேய் அரிக் கண் - சிவந்த வரிகளை உடைய கண்களையும்; வென்றி மாதர் - எவரையும் வெல்லும் தன்மையையும் கொண்ட மகளிரது; வலிய நெடும் புலவியினும் - உறுதியான நீண்ட ஊடற் காலத்தும்; வணங்காத - தாழ்வுறாத; மகுடநிரை - மணிமுடிகளின் வரிசை; வயங்க - ஒளி வீசித் துலங்கவும்....(மன், ஓ - அசைகள்). இராவணன் திரிமூர்த்திகளாலும் வெல்லுதற்கு அரிய வர பலமுடையவன் என்பதை முதலிரண்டு அடிகளாற் கூறினார். மகளிர் ஊடற் காலத்துக்கும் வணங்க மாட்டான் என்பதைப் பின்னிரண்டு அடிகளால் உணர்த்தினார். இரணியன், 'என், வாளினைத் தொழுவதல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் நாளினும் உளதோ' என இரணியன் வதைப் படலத்தில் (6334) கூறுதல் ஒப்பு நோக்கற்குரியது. 'மெலியுமிடை தடிக்கு முலை' - தொடை முரண்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who wears the tiger's hide, he who is clad in golden cloth, and he of the flower
  2. have not the strength to harm him; who among the gods can now be set against him?
  3. With the row of crowns that would not bow even in the long, stubborn sulks
  4. of conquering women with slender waists, full breasts, young bamboo shoulders and red-streaked eyes, shining,

What the poem says

The description of Irāvaṇaṉ continues. Thanks to his boons, not even the three great gods, Civaṉ in his tiger skin, Tirumāl in his golden robe and Piramaṉ on the lotus, can harm him. Who else could ever be found to defeat him?

His ten crowned heads shine in a row, and they never bow, not even before beautiful women in a lovers' quarrel, when a lover would normally humble himself. The demon king Iraṇiyaṉ boasts in the same way later in the poem.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puliyiṉ ataḷ uṭaiyāṉum, poṉṉāṭai puṉaintāṉum, pūviṉāṉum
naliyum valattār allar; tēvariṉ iṅku yāvar iṉi nāṭṭal āvār?
meliyum iṭai, taṭikkum mulai, vēy iḷan tōḷ, cēyarik kaṇ, veṉṟi mātar
valiya neṭum pulaviyiṉum vaṇaṅkāta makuṭa nirai vayaṅka, maṉṉō.