கம்பராமாயணம் 3153 · ஆரணிய 7.4

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பண்டு அலங்கு திசைக் களிற்றின் பணை மருப்பின் இணை ஒடியப் படர்ந்த பொன் தோள்
விண் தலங்கள் உற வீங்கி , ஓங்கு உதய மால் வரையின் விளங்க , மீதில்
குண்டலங்கள் , குல வரையை வலம் வருவான் இரவி கொழுங் கதிர் சூழ் கற்றை
மண்டலங்கள் பன்னிரண்டும் நால் ஐந்து ஆய்ப் பொலிந்த என வயங்க , மன் , ஓ .

பொருள் · Meaning in Tamil

வண்டு அலங்கு நுதல் - வண்டுகள் மொய்க்கின்ற நெற்றியினை உடையனவும்; திசைய - எட்டுத் திக்குகளில் உள்ளனவும் (ஆகிய); வயக் களிற்றின் - வலிமை மிக்க யானைகளின்; மருப்பு ஒடிய - கொம்புகள் முறியும்படி; அடர்த்த பொன்தோள் - வன்மையுறத் தாக்கிய அழகிய தோள்கள்; விண் தலங்கள் உற வீங்கி - வான் அளாவும் படி பருத்துயர்ந்து; ஓங்கு உதய மால் வரையின் விளங்க - மேல் வளர்ந்த பெரிய உதய பருவதம் போல் ஒளி வீசவும்; மீதில் குண்டலங்கள் - (அத்தோள்களின்) மேலே (செவியிலிருந்து தொங்கும்) குண்டலங்கள் (இருபதும்); கொழுங் கதிர்க் கற்றை சூழ் - வளமான கிரணங்கள் செறிந்து சூழ்ந்த; இரவி மண்டலங்கள் பன்னிரண்டும் - கதிரவன் மண்டலங்கள் பன்னிரண்டும்; குல வரையை வலம் வருவான் - (மலைக் குலத்தில் உயர்ந்த) மேரு மலையை வலமாய் வர; நால் - ஐந்து ஆய்ப் பொலிந்த என - இருபதாய் விளங்கின என; வயங்க - ஒளி வீசவும்...(மன், ஓ - அசைகள்)

இராவணன் திக்கு விசயப் பொழுதில் திசை யானைகளோடு பொருத, அவற்றின் கொம்புகள் இவன் தோள்களின் வலிமையால் முறிந்தன என்பர். ஐராவதம், புண்டரீகம், வாமநம், குமுதம், அஞ்சனம், புட்ப தந்தம், சார்வ பௌமம், சுப்பிரதீகம் என்பன எட்டுத் திசை யானைகள். சூரியர் பன்னிருவர்: தாதா, இந்திரன், அறியமா, மித்திரன், வருணன், அம்சுமான், பர்ஜனயன், பகன், விவசுவான், பூஷா, விட்டுணு, துவஷ்டா ஆகியோர்.

தோள் உதய பருவதம் போன்றிருத்தல் உவமையணி. பன்னிரு சூரியர் இராவணனின் இருபது குண்டலங்களாய் நின்றாற் போலிருந்தனர் என்பது தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His golden shoulders, which had broken the tusks of the mighty elephants of the quarters with bees swarming on their brows,
  2. swelling till they touched the heavens, shining like the great towering Mountain of Sunrise; and above them
  3. his earrings, as though the twelve orbs of the sun, ringed with rich clustered rays, circling the noble mountain,
  4. had become four times five and shone there, glittering,

What the poem says

The portrait of Irāvaṇaṉ goes on. On his conquest of the directions he wrestled the eight elephants that guard the quarters and broke their tusks against his shoulders. Those twenty golden shoulders now rise to the sky and glow like the Mountain of Sunrise.

Above them hang his twenty earrings. The poet imagines the twelve suns that circle Mount Mēru multiplying into twenty and settling on him as ornaments.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇṭu alaṅku nutal ticaiya vayak kaḷiṟṟiṉ maruppu oṭiya aṭartta poṉ tōḷ
viṇ talaṅkaḷ uṟa vīṅki, ōṅku utaya māl varaiyiṉ viḷaṅka, mītil
kuṇṭalaṅkaḷ, kula varaiyai valam varuvāṉ iravi koḻuṅ katir cūḻ kaṟṟai
maṇṭalaṅkaḷ paṉṉiraṇṭum nāl aintu āyp polinta eṉa vayaṅka, maṉṉō.