கம்பராமாயணம் 3173 · ஆரணிய 7.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவ்வழி - அவ்விடத்தில் (அந்நேரத்தில்); தங்கையும் - (இராவணன்) தங்கையாகிய சூர்ப்பணகையும்; தலையில் தாங்கிய செங்கையள் - தலை மேல் சுமந்த சிவந்த கையை உடையவளும்; சோரியின் தாரை - இரத்த வெள்ளத்தால்; சேந்து இழி கொங்கையள் - சிவந்து பெருகும் மார்பை உடையவளும்; மூக்கிலள் - மூக்கை இழந்தவளும்; குழையின் காதிலள் - குழையணிந்த காதுகளை இழந்தவளும்; மங்குலின் ஒலிபட - மேகத்தின் இடி முழக்கம் தோற்கும்படி; திறந்த வாயினள் - ஓலமிட்டுத் திறந்த வாயை உடையவளும்.
கொங்கை, மூக்கு, காது ஆகிய உறுப்புக்களை இலக்குவனால் இழந்த நிலை கூறப்படுகிறது. பொருள் அடுத்த பாடலில் முடிகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then the sister too, her red hands
- held on her head, her breasts reddened by streams
- of running blood, without her nose, without her ears and their earrings,
- her mouth thrown open with a cry louder than the thunder,
What the poem says
At that moment Cūrppaṇakai arrives. She holds her hands on her head in grief; blood streams down over her breasts; her nose and her ears with their earrings are gone, cut off by Ilakkuvaṉ.
Her mouth is open in a wail louder than thunder. The sentence continues in the next verse.