கம்பராமாயணம் 3174 · ஆரணிய 7.25

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முடை உடை வாயினால் முறையிட்டு , ஆர்த்து எழு
கடை யுகம் கடல் ஒலி காட்டக் காந்துவாள் ,
குடதிசைச் செக்கரின் சேந்த கூந்தலாள் ,
வடதிசை வாயிலின் வந்து தோன்றினாள் .

பொருள் · Meaning in Tamil

முடையுடை வாயினள் - முடை நாற்றம் வீசும் வாயினால்; முறையிட்டு ஆர்த்து - தன் குறையை உரக்கக் கூவுகின்றவளும்; எழுகடையுகக் கடல் ஒலி காட்ட - யுக முடிவில் எழும் கடலின் ஆரவாரம் செய்து; காந்துவாள் - மனம் எரிகின்றவளும்; குடதிசைச் செக்கரின் சேந்த கூந்தலாள் - மேற்குத் திசையிற் காணப்படும் அந்திச் செவ்வானம் போல் சிவந்த கூந்தலை உடையவளுமாய்; வடதிசை வாயிலின் வந்து தோன்றினாள் - வடக்குப் பக்கத்து அரண்மனை வாசலில் வந்து சேர்ந்தாள்.

இலங்கைக்கு வடக்கிலுள்ள தண்டக வனத்தில் சின்னா பின்னப்பட்டுச் சூர்ப்பணகை வருதலால் வடதிசை வாயிலில் புகுந்து வருதல் கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. with her foul-smelling mouth crying out her wrong, raging
  2. with a roar like the sea that rises at the end of the age,
  3. her hair red as the evening glow in the western sky,
  4. she appeared at the northern gate.

What the poem says

Cūrppaṇakai shrieks out her grievance from her stinking mouth with a roar like the ocean rising at the end of an age, burning with rage. Her hair is red as the evening sky in the west.

She appears at the northern gate of the palace, because she has come from the Taṇṭaka forest, which lies north of Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṭaiyuṭai vāyiṉaḷ muṟaiyiṭṭu, ārttu eḻu
kaṭaiyukak kaṭal oli kāṭṭak kāntuvāḷ,
kuṭa ticaic cekkariṉ cēnta kūntalāḷ,
vaṭa ticai vāyiliṉ vantu tōṉṟiṉāḷ.