கம்பராமாயணம் 3194 · ஆரணிய 7.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று இனைய வன் துயர் - இவ்வாறான பெருந்துயரத்தை; இலங்கை நகர் எய்த - இலங்கை நகர மக்கள் எய்தவும்; நின்றவர் இருந்தவரொடு ஓடு நெறி தேட - அமர்ந்திருந்தவரும், நின்றிருந்தவரும் ஓடுதற்கு வழி பார்க்கவும்; குன்றின் அடி வந்துபடி கொண்டல் என - மலையடிவாரம் நாடிச் சேர்ந்த மேகத்திரளைப் போல; (சூர்ப்பணகை); மன்னன் பொன் திணி கருங்கழல் - அரசன் இராவணனுடைய பொன்னாலாகிய வீரக்கழல் அணிந்த கரிய பாதங்களில்; விழுந்தனள் புரண்டாள் - வந்து வீழ்ந்து உருண்டாள்.
இராவணன் சீற்றம் கொள்ளும் போது தாங்க ஒண்ணாதென ஓடக் கருதினர் மக்கள். உவமையணி. இராவணன் - குன்று; சூர்ப்பணகை - கருமேகம். கருங் கழல் - பாதத்துக்கு அன்மொழித்தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As such fierce grief came upon the city of Ilaṅkai,
- and those standing and those seated looked for a way to flee,
- like a rain cloud that comes and settles at the foot of a mountain,
- she fell at the king's dark, gold-anklet-bound feet and rolled there.
What the poem says
While the whole city is plunged in grief, people sitting and standing look for somewhere to run, knowing that Irāvaṇaṉ's rage will be unbearable.
Cūrppaṇakai reaches the king and throws herself at his dark feet with their golden anklets, rolling on the ground there like a dark cloud that settles at the foot of a mountain.