கம்பராமாயணம் 3196 · ஆரணிய 7.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விரிந்த வலயங்கள் - ஒளி விரிந்த வாகு வளைகள்; மிடை தோள் படர - பொருந்திய தோள்கள் பொங்கி எழவும்; நயனங்கள் - கண்கள்; மீதிட்டு எரிந்த - நெருப்புக் கிளர்ந்து எரியவும்; எயிறின் புறம் இமைப்ப - பற்கள் வெளித் தோன்றி ஒளிவீசவும்; நெரிந்த புருவங்கள் - வளைந்துயரும் புருவங்கள்; நெடு நெற்றியினை முற்ற - விரிந்த நெற்றியின் மீதேறிச் சேரவும்; (அக்கோபக் காட்சி கண்டு); புவனங்கள் திரிந்த - உலகங்கள் நிலைகுலைந்தோடின; தேவரும் - தேவர்களும்; வினை அயர்த்தார் - செய்தற்குரிய கடமைகளை மறந்தனர்.
பொங்கியெழும் தோளும், நெருப்புமிழ் கண்களும், புறத்திடும் பற்களும், உயரும் புருவமும் சின அறிகுறிகள். 'நயனங்கள் எரிந்த' என்ற தொடரில் 'எரிந்த' என்ற பலவின் பால் வினைமுற்றை (முற்றெச்சம்) என எச்சமாக்கிப் பொருள் கொள்ளப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the shoulders crowded with broad armlets swelled out, as his eyes
- blazed up and flashed beyond his fangs,
- as his knitted brows climbed his whole long forehead,
- the worlds reeled, and the gods forgot their duties.
What the poem says
Irāvaṇaṉ's anger shows in every feature. His shoulders, ringed with armlets, swell; his eyes blaze with fire; his fangs flash; his knitted brows climb his broad forehead.
At the sight the worlds lurch from their places, and the gods forget the work they were doing.