கம்பராமாயணம் 3212 · ஆரணிய 7.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அற்று அவன் உரைத்தலோடும் - அவ்வாறு (இராவணன் கூறிய மாத்திரத்தில்; அழுது இழி அருவிக் கண்ணள் - அழுவதால் வழியும் அருவி போன்ற கண்ணீரை உடையவளாய் (சூர்ப்பணகை); எற்றிய வயிற்றள் - (கைகளால்) அடிக்கப்படும் வயிற்றை உடையவளாய்; பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள் - நிலத்தின் மேல் விழுந்து புரண்டு அழுகின்றவளாய்; ஐய - ஐயனே; சுற்றமும் நொய்து தொலைந்தது - (காவல் நின்ற) உறவும் விரைவில் அழிந்து போனது; எனச் சுமந்த கையள் - எனத் தலை மீது கையை வைத்தவாறு, உற்றது தெரியும் வண்ணம் - (கரன் முதலியோருக்கு) நேர்ந்த அழிவின் வரலாறு விளங்கும்படியாக; ஒரு வகை உரைக்கலுற்றாள் - ஒருவாறு தொகுத்துக் கூறலாயினாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as he said this, with eyes streaming tears like a waterfall,
- beating her belly, she fell upon the ground and wailed;
- 'Our kinsmen too are destroyed, my lord, and quickly!' she cried, hands upon her head,
- and began to tell, in some fashion, what had happened, so that he might know.
What the poem says
Irāvaṇaṉ's question about Karaṉ brings on a fresh outburst of grief. Cūrppaṇakai weeps in floods, beats her stomach, throws herself on the ground and, with her hands on her head, cries that their kinsmen have been wiped out in no time.
She then starts to give him a short account of how Karaṉ and his army were destroyed. The verse marks a change of metre, as a new movement of the episode begins.