கம்பராமாயணம் 3213 · ஆரணிய 7.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கரன் முதல் காளை வீரர் - கரன் முதலிய இளங்காளைகளான வீரர்கள்; சொல் என்று என் வாயில் கேட்டார் - நேர்ந்தது சொல் என்று என் வாய்மொழியைக் கேட்ட உடனே; தொடர்ந்து எழு சேனையோடும் - இடைவிடாது வரும் படைகளோடும்; கல்லென்ற ஒலியில் சென்றார் - கல்லென்ற பேரொலி முழங்கப் புறப்பட்டனர்; எல் ஒன்று கமலம் - ஒளிக்கதிர் பட்டு விரிந்த தாமரை போலும்; செங்கண் இராமன் - சிவந்த கண்களை உடைய இராமன்; என்று இசைத்த ஏந்தல் - எனப் பெயர் பெற்ற தலைவனின்; வில் ஒன்றில் கடிகை மூன்றில் - புகழ் பெற்ற வில்லால் மூன்றே நாழிகையில், ஏறினர் விண்ணில் என்றாள் - இறந்து விண்ணுலகடைந்தனர் எனக் கூறினாள்.
இராமன் வில்லாற்றல் விளங்க, சென்றவர் மூன்றே நாழிகையில் மடிந்தார் என விரைவு தோன்றக் கூறினாள். இந்த நிலையிலும் கூட இராமன் அழகிலும் வீரத்திலும் சூர்ப்பணகை கொண்ட கவர்ச்சி தெளிவாக விளங்குகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Hearing my words, "Speak!", they set out with an army that rose in endless ranks,
- with a roaring din, Karaṉ and those young bull-like heroes;
- by the single bow of the lord called Irāmaṉ, with red eyes like a lotus open to the sun,
- in three nāḻikai they went up to heaven,' she said.
What the poem says
Cūrppaṇakai tells how Karaṉ and his warriors, after asking her what had happened, marched out at once with a vast, noisy army. Irāmaṉ, with eyes like a lotus opened by sunlight, sent them all to heaven with his one bow in just three nāḻikai, a little over an hour.
The short time stresses Irāmaṉ's skill and speed. Even in her grief, her description of him shows she is still taken with his beauty and valour.