கம்பராமாயணம் 3218 · ஆரணிய 7.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அவளுடைய) கள் எனக் கனிந்த இன்சொல் - மதுவைப் போல் மயக்கமூட்டும் இனிய மொழிகள்; காமரம் முரலும் பாடல் - காமரம் என்னும் பண்ணிசை கமழும் பாடலை ஒக்கும்; தேமலர் நிரந்த கூந்தல் - இனிய மலர்கள் சூடப் பெற்ற கூந்தலை உடைய (அவள்); தேவர்க்கும் அணங்கு ஆம் - தேவமாதரும் போற்றும் அழகுமிக்கவளாம், என்ன - என்று சொல்லும்படி; தாமரை இருந்த தையல் - தாமரை மலரில் வசிக்கும் திருமகளும்; சேடி ஆம் தரமும் அல்லள் - தோழியாதற்குக் கூடத் தகுதி அற்றவள்; யாம் உரை வழங்கும் என்பது - அவளுடைய அழகைக் குறித்து நான் எடுத்துச் சொல்லக் கருதுவது; ஏழைமைப் பாலது அன்றோ? - அறியாமையின் பாற்பட்டது ஆகும் அன்றோ?
மானுடப் பெண்களினும் தேவமாதர் அழகுடையார். தேவமாதர்க்கும் தலைவியாய், திருமகள் தாதியாம் தரமும் பெறாமற் போமளவு சிறந்த எழிலுடையாள் சீதை எனக் கூறுகின்றாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Her sweet speech, ripened like honey-wine, is a song humming the kāmaram mode;
- her hair is strewn with fragrant flowers; she is such that she would be a goddess even to the gods;
- the lady who sits on the lotus is not fit even to be her maid;
- for me to try to put her in words, is that not mere foolishness?'
What the poem says
Cūrppaṇakai goes on. Cītai's voice is as intoxicating as wine and as sweet as a song in the kāmaram melody; her hair is full of flowers. She is so beautiful that even goddesses would admire her, and Lakṣmī herself, who sits on the lotus, would not be good enough to serve as her maid.
Divine women are more beautiful than human ones, and Lakṣmī is the first among them, so the comparison raises Cītai above all. Cūrppaṇakai ends by saying it is folly even to try to describe her.