கம்பராமாயணம் 3227 · ஆரணிய 7.78

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' தேர் தந்த அல்குல் சீதை , தேவர்தம் உலகின் , இம்பர் ,
வார் தந்த கொங்கையார் தம் வயிறு தந்தாளும் அல்லள் ;
தார் தந்த கமலத் தாளைத் தருக்கினர் கடையச் சங்க
நீர் தந்தது , அதனை வெல்வான் நிலம் தந்து , நிரம்பிற்று , அன்று , ஏ . ''

பொருள் · Meaning in Tamil

தேர் தந்த அல்குல் சீதை - தேர் போன்ற அல்குலை உடைய சீதை; தேவர் தம் உலகின் - அமரர் உலகத்திலும்; இம்பர் - இந்த மண்ணுலகத்திலும் இருக்கும்; வார் தந்த கொங்கையார் தம் - கச்சணிந்த மார்பினை உடைய பெண்களின்; வயிறு தந்தாளும் அல்லள் - வயிற்றில் பிறந்தவளும் அல்லள்; (வேறு எவ்வாறு பிறந்தாள் எனில்); சங்க நீர் - சங்குகளை உடைய திருப்பாற்கடல்; தருக்கினர் கடைய - செருக்கு மிக்க தேவர்களும் அசுரர்களும் (தன்னைக்) கடைந்த போது; தார் தந்த கமலத்தாளை - மலர்ந்த தாமரையில் வாழ்கின்ற திருமகளை; தந்தது - அளித்தது; அதனை வெல்வான் - அக்கடலின் இக்கொடையை வெல்லும் பொருட்டு; நிலம் - பூமியானது; தந்து நிமிர்ந்தது - சீதையை அளித்துப் பெருமையால் உயர்ந்தது. (அன்றே - ஈற்றசை.

திருப்பாற் கடல் திருமகளைத் தந்த சிறப்பை வெல்வதற்காகப் பூமி சீதையை அளித்தது என்பது கருத்து. இது தற்குறிப்பேற்ற அணி. சங்க நீர் - சங்கு போல் வெளுத்த பாற்கடல் என்றும் கூறலாம். தந்த என்ற சொல் முதல் அடியில் உவமை உருபாகவும், இரண்டாம் அடியில் அணிந்த என்ற பட்டன மூன்றாவது அடியில் பூத்த என்ற பொருளிலும் வருகின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Cītai, whose hips are like a chariot, was not born from the womb
  2. of any woman with banded breasts, in the world of the gods or here below;
  3. when the proud ones churned it, the conch-filled sea gave forth the lady
  4. of the blossoming lotus; to outdo it, the earth gave her and stood tall.'

What the poem says

Cūrppaṇakai tells of Cītai's miraculous birth. She came from no woman's womb, in heaven or on earth. When the gods and demons churned the ocean of milk, the sea gave the world Lakṣmī; the earth, not to be outdone, produced Cītai, and stood proud of its gift.

Cītai was in fact found in a furrow of the earth by King Caṉakaṉ. The poet gives this a fanciful cause, a rivalry between earth and sea, which is a recognised figure of speech.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' tēr tanta alkul cītai, tēvartam ulakiṉ, impar,
vār tanta koṅkaiyārtam vayiṟu tantāḷum allaḷ;
tār tanta kamalattāḷait tarukkiṉar kaṭaiyac caṅka
nīr tantatu, ataṉai velvāṉ nilam tantu, nimirntatu aṉṟē. ''