கம்பராமாயணம் 3228 · ஆரணிய 7.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மீன்கொண்டு ஊடாடும் வேலை - மீன்களைத் தன்னகத்தே கொண்டு அசையும் கடலினை; மேகலை - மேகலை அணியாகப் பெற்றிருக்கும்; உலகம் - உலக மக்கள்; ஏத்த - புகழும் வண்ணம்; தேன் கொண்டு ஊடாடும் கூந்தல் - வண்டுகள் மணம் நாடித் தேடி வந்து ஆடும் கூந்தலையும்; சிற்றிடை - சிறிய இடையையும் உடைய, சீதை என்னும் மான் - சீதையென்னும் மான் போன்றவளை; நீ கொண்டு ஊடாடு - நீ மனைவியாகக் கொண்டு அவளோடு மகிழ்ந்திருப்பாயாக; உன் வாள் வலி உலகம் காண - உன்னுடைய வாளாற்றலை உலகம் கண்டு வியக்கும்படியாக; யான் கொண்டு ஊடாடும் வண்ணம் - நான் துணைவனாகக் கொண்டு மகிழ்ந்திருக்குமாறு; இராமனை என்பால் தருதி - இராமனை எனக்குக் கொடுப்பாயாக.
உன் வலிமையால் இராமனையும் சீதையையும் கைப்பற்றி அவனை எனக்குத் தந்து, அவளை நீ எடுத்துக்கொள் எனத் தன் காம நோக்கை வெட்கமின்றிக் கூறினாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'So that the world, whose girdle is the sea where fish swim to and fro, may praise you,
- take and delight in the doe called Cītai, with slender waist
- and hair where honeybees play; and so that the world may see the strength of your sword,
- give Irāmaṉ to me, that I may take him and delight in him.'
What the poem says
Cūrppaṇakai now reveals her own aim. Let Irāvaṇaṉ take Cītai, the doe-like woman whose flowered hair draws the bees, and enjoy her, to the admiration of the sea-girdled world. And let him prove the power of his sword by capturing Irāmaṉ and handing him over to her as her lover.
She states her desire for Irāmaṉ without any shame. Her plan is that each of them should get the partner they want.