கம்பராமாயணம் 323 · பால 6.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வந்த நம்பியை - அவ்வாறு அருகு வந்து சேர்ந்த நம்பியாகிய இராமனை; தம்பி தன்னொடும் - ராமனை விட்டு நீங்காத தம்பியான இலக்குவனோடும்; முந்தை நான்மறை முனிக்குக் காட்டி - பழைய வேதங்களை அறிந்த நல் முனிவனாகிய விசுவாமித்திரனுக்குக் காட்டி; நல்தந்தை நீ தனித்தாயும் நீ இவர்க்கு - இந்த குமாரர்களுக்கு இனித் தாயும் தந்தையும் நீங்களே தாம்; எந்தை தந்தனென் - எந்தையே! இவர்களைத் தங்களிடம் கொடுத்தேன்; இயைந்த செய்க என்றான் - இவர்களைக் கொண்டு இயைந்தபடி காரியங்களைச் செய்வீராக என்றான்.
நம்பி: பெருமை உடையவன் (இராமன்). 'தம்பி' எனப் பொதுப்படக் கூறினும் இலக்குவனையே குறிக்கும். காட்டுதல்: சுட்டிக் காட்டுதல். எந்தை: எந்தையே என்னும் விளி. இயைந்த: உமக்கு இயைந்த அல்லது அவர்கட் கியைந்த எனவும் பொருள் கொள்ளலாம். செய்க: வியங்கோள். இராம இலக்குவர்களை முனிவரிடம் ஒப்படைத்தல் கூறப்பட்டது. நம்பியை - தம்பியோடு - காட்டி - தந்தனன் - இயைந்த செய்க என்பது பொருள் முடிபாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The prince who had come, with his younger brother,
- he showed to the sage of the ancient four Vedas: 'Their good
- father you are, and their only mother you are;
- my lord, I have given them to you; do as is fitting.'
What the poem says
Tacarataṉ presents Irāmaṉ and Ilakkuvaṉ, who never leaves his side, to Vicuvāmittiraṉ, and entrusts them to him completely: the sage is now to be both father and mother to them.
This is the 'entrusting' (kaiyaṭai) that gives the chapter its name.