கம்பராமாயணம் 322 · பால 6.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குருவின் வாசகம் கொண்டு - குல குருவான வசிட்ட முனிவனது சொற்களைச் செவியேற்றுக் கொண்டு; கொற்றவன் - மன்னனாகிய தயரதன் (பக்கத்திலுள்ள பணியாட்களைப் பார்த்து); திருவின் கேள்வனை - (இலக்குமியின் நாயகனான திருமாலின் அவதாரமான) ராமபிரானை; கொணர்மின் சென்று என - சென்று அழைத்துக் கொண்டு வருக என்று சொல்ல; வருக என்றனன் - (பணியாட்கள் சென்று ராமனை அடைந்து) தந்தை வருக என அழைத்தார்; என்னலோடும் - என்று சொல்லவே; அறிவின் உம்பரான் - அறிவில் உயர்ந்து விளங்கும் ராமபிரான்; வந்து அருகு சார்ந்தனன் - புறப்பட்டு வந்து, மன்னனருகில் சேர்ந்தான்.
குரு: குல குருவாகிய வசிட்டன். வாசகம்: சொல் (பேச்சு). கொண்டு: ஏற்றுக்கொண்டு. கொணர்மின்: அழைத்துவாருங்கள். 'கொணர்மின்' என்றதால் ஏவப்பட்டோர் பலர் என்பது புலனாம். வருக: வியங்கோள் வினைமுற்று. சார்தல் - சேர்தல். உம்பர்: தலைமை. அறிவின் உம்பரான்: மேலான அறிவுடையவன்; “ஞான நாயகன்” என்னலுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Accepting his guru's word, the king
- said, 'Go and bring the consort of Tiru'; and when they said
- 'He calls you to come', he came
- and stood close by, he who is supreme in wisdom.
What the poem says
Tacarataṉ accepts Vacittaṉ's advice and sends for Irāmaṉ, here called 'the consort of Tiru', the goddess Lakṣmī, since he is Viṣṇu incarnate. Irāmaṉ, whose wisdom is supreme, comes and stands beside his father.