கம்பராமாயணம் 321 · பால 6.15

Section பால காண்டம் / 6. கையடைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐய - தசரத மன்னனே; பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் - பெய்கின்ற மழையினாலே பெருகுகின்ற நீர்ப்பெருகு; போய் மொய்கொள் வேலைவாய் - சென்று, நீர்ச் செறிவுமிக்க கடலிடத்தே; முடுகும் ஆறுபோல் - விரைந்து சேரும் தன்மை போல்; நின் மகற்கு - உனது புத்திரனான ராமபிரானுக்கு; அளவில் விஞ்சை - அளத்தற்கரிய வித்தைகள் பலவும்; வந்து எய்து காலம் - வந்து அடையும் காலம்; இன்று எதிர்ந்தது என்னவே - இன்று கூடியிருக்கிறது என்று வசிட்ட முனிவன் சொல்லவும்.

இது குளகம். அடுத்த பாட்டுடன் பொருள் முடியும். பெருகு வெள்ளம்: பெருகிய வெள்ளம் (வினைத்தொகை). போய்: நகர்ந்து சென்று. மொய்: செறிவு (வலிமை). முடுகுதல்: விரைந்து செல்லுதல். ஆறு: தன்மை. (ஆறுமாம்). கடலில் சென்று கலக்கும் வெள்ளம் அளவிடற்கரியது. அதுபோல இராமனை அடையும் வித்தைகளும் அளவிடற்கரியனவாம். முந்திய பாடலில் “உறுதி எய்தும் நாள்” என்று கூறியதற்கேற்ப, இங்கு 'விஞ்சை வந்தெய்து காலம்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'As the flood swollen by pouring rain goes
  2. rushing into the crowded sea,
  3. so, my lord, for your son the time when boundless knowledge
  4. comes to him has arrived today,' he said.

What the poem says

Vacittaṉ explains: going with Vicuvāmittiraṉ, Irāmaṉ will gain countless kinds of knowledge, which will pour into him as floodwaters pour into the sea.

This verse is a kuḷakam, completed by the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'peyyum māriyāl peruku veḷḷam pōy
moy koḷ vēlaivāy muṭukum āṟupōl,
aiya! niṉ makaṟku, aḷavu il viñcai vantu
eytu kālam iṉṟu etirntatu' eṉṉavē.