கம்பராமாயணம் 320 · பால 6.14

Section பால காண்டம் / 6. கையடைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கறுத்த மாமுனி - சீற்றம் கொண்டெழுந்த விசுவாமித்திர முனிவனது; கருத்தை உன்னி - உள்ளக் கருத்தை நினைத்துத் தேர்ந்து (அவனை நோக்கி); நீ பொறுத்தி என்று அவற்புகன்று - நீ பொறுத்தருள்வாயாக என அவனுக்குச் சொல்லிவிட்டு (பிறகு மன்னனைப் பார்த்து); நின் மகற்கு - உனது மகனாகிய ராமபிரானுக்கு; உறுத்தல் ஆகலா உறுதி - அடைவித்தற்கு அரிய நன்மைகளெல்லாம்; எய்தும் நாள் மறுத்தியோ - வந்து கூடும் நாளை வேண்டாமென மறுத்துக் கூறுவாயோ; எனா வசிட்டன் கூறினான் - என்று வசிட்ட முனிவன் கூறலானான்.

கறுத்தல்: சினத்தல். உன்னி: நினைத்து. பொறுத்தி: பொறுப்பாயாக. மரியாதை உணர்த்திற்று. உறுத்தல்: அடையச் செய்தல் (பிறவினை). உறுதி: நன்மை. மறுத்தியோ: மறுத்துரைப்பாயோ (அதிகாரத்தை உணர்த்திற்று). ஆக+அலா: ஆகலா: ஆகமாட்டாது.

சினம் கொண்டெழுந்த விசுவாமித்திரனைப் 'பொறுத்தி' எனக் கூறி அமைதியுறச் செய்தபின் மன்னனை நோக்கி, உன் மகனுக்கு “உறுத்தலாகலா உறுதி எய்தும் நாள் இது. இதை மறுத்தியோ” என வசிட்டன் கூறினான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Reading the mind of the great sage who had grown angry,
  2. Vacittaṉ said to him, 'Bear with this,' and then: 'The day when blessings
  3. that no one could bestow will come to your son,
  4. will you refuse it?'

What the poem says

Vacittaṉ steps in. He first calms Vicuvāmittiraṉ by asking his patience, then turns to Tacarataṉ and asks whether he will really turn away the day that brings his son blessings no one else could give him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṟutta mā muṉi karuttai uṉṉi, nī
poṟutti eṉṟu avaṟ pukaṉṟu, 'niṉ makaṟku
uṟuttal ākalā uṟuti eytum nāḷ,
maṟuttiyō?' eṉā vaciṭṭaṉ kūṟiṉāṉ.