கம்பராமாயணம் 3240 · ஆரணிய 7.91

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாது கொண்ட சீதம் மேவு சந்து , சந்த மென் தளிர் ,
போது , கொண்டு அடுத்தபோது , பொங்கு தீ மருந்தினால்
வேது கொண்டது என்ன , மேனி வெந்து வெந்து , விம்மு தீ
ஊது வன் துருத்திபோல் , உயிர்த்து உயிர்த்து , உயங்கினான் .

பொருள் · Meaning in Tamil

தாது கொண்ட போது - மகரந்தம் பொருந்திய மலர்களையும்; சீதம் மேவு சாந்து - குளிர்ச்சி உடைய சந்தனத்தையும்; சந்த மென்தளிர் - அழகிய மெல்லிய தளிர்களையும்; கொண்டு அடுத்தபோது - எடுத்துக் கொண்டு பணிப் பெண்கள் (இராவணனை) நெருங்கிய காலத்தில்; பொங்கு தீ மருந்தினால் வேது கொண்ட தென்ன - கொதிக்கும் நெருப்புச் சேர்ந்த மருந்தினால் வேது கொடுத்தாற் போல; மேனி வெந்து வெந்து - உடல் வெப்பத்தால் சூடுபட்டு; விம்மு தீ ஊது வன் துருத்தி போல் - பொங்கி எழும் நெருப்பை ஊதி வளர்க்கும் (கொல்லன் துருத்தி போன்று; உயிர்த்து உயிர்த்து உயங்கினான் - பெருமூச்சு விட்ட வண்ணம் மயங்கிச் சோர்ந்தான்.

சில நோய்களுக்கு வெப்ப நெருப்பால் வேது கொடுத்தலை உவமையாக்கினார். 'செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச் சந்தனம் என்று ஆரோ தடவினார் என்ற நந்திக் கலம்பகச் செய்யுளை ஒப்பிடுக. வேது - குறிப்பு வினையாலணையும் பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When they came near bringing cool sandal paste, lovely soft shoots
  2. and flowers full of pollen, as if he were given a fomentation
  3. with a medicine of blazing fire, his body burned and burned, and like a strong bellows
  4. blowing up a roaring fire, he sighed and sighed and grew faint.

What the poem says

His attendants bring cooling things, sandal paste, tender leaves and fresh flowers, but on his burning body they feel like a hot poultice of fiery medicine. He scorches all over and, panting like a blacksmith's bellows fanning a fire, breathes heavily and sinks into exhaustion.

The image is of the heat treatment given for certain illnesses. Another Tamil poem, the Nantik Kalampakam, has a similar conceit: a lover complains that someone smeared him with fire's juice and called it cool sandal.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tātu koṇṭa cītam mēvu cāntu, canta meṉ taḷir,
pōtu, koṇṭu aṭuttapōtu, poṅku tī maruntiṉāl
vētu koṇṭateṉṉa, mēṉi ventu ventu, vimmu tī
ūtu vaṉ turuttipōl, uyirttu uyirttu, uyaṅkiṉāṉ.