கம்பராமாயணம் 3241 · ஆரணிய 7.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாவியாது - (தடுமாறும்) உள்ளத்தை ஒரு நிலைப்படுத்தாது; தீது எனாது - (பிறன்மனை நயத்தலைத்) தீவினை எனக் கருதாது; தையலாளை - சீதையை; மெய் உறப் பாவியாத - (சிறிது நேரமேனும்) உள்ளார எண்ணாமல்; போது இலாத பாவி - (நல்ல) நேரம் இல்லாத (காலம்) பாவி (இராவணன்; மாழை - மாவடுவும், பானல் - நெய்தல் பூவும்; வேல் - வேலாயுதமும்; காவி - கருங்குவளையும்; ஆன கண்ணி - நிகர்த்த கண்களையுடைய சீதையின்; மேனி காண மூளும் ஆசையால் - உடம்பைக் காணப் பொங்கும் காமத்தால்; ஆவி சால நொந்து நொந்து - உயிர் பெரிதும் துன்பம் கொள்ள; அழுங்குவானும் ஆயினான் - வருந்துகின்றவனும் ஆனான்.
பழி பாவங்களைக் காமத்தால் இராவணன் மறந்து போனான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Not steadying his mind, not calling it evil, the sinner who had not a moment
- when he did not dwell on the lady as if she were bodily present,
- through the desire that flared to see the form of her whose eyes were mango slice, water lily, spear
- and dark blue lily, suffered in his soul again and again, and came to grief.
What the poem says
Irāvaṇaṉ makes no effort to steady his wandering mind and never stops to think that desiring another man's wife is a sin. Every moment he imagines Cītai as if she were there with him.
Her eyes are compared to a slice of green mango, the blue water lily, a spear and the dark kuvaḷai flower, for their shape, colour and sharpness. Longing to see her, he suffers again and again. Lust has made him forget both disgrace and sin.