கம்பராமாயணம் 3263 · ஆரணிய 7.114
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உடுபதியே - விண்மீன்களின் தலைவனே; தேயா நின்றாய் - (நீ உன்) உடல் தேயப் பெற்றாய்; மெய் வெளுத்தாய் - மேனி வெண்ணிறமுற்றாய்; உள்ளம் கறுத்தாய் - உள்ளிடத்தே கறுத்தும் விளங்குகின்றாய்; நிலை திரிந்து காயா நின்றாய் - குளிர்ச்சி நிலை மாறி வெப்பமும் தருகின்றாய்; ஒரு நீயும் - உயர்ந்தவனாகிய நீயும்; கண்டார் சொல்லக் கேட்டாயோ - (என்னைப் போன்றே) சீதையின் அழகைக் கண்டவர்கள் வருணிக்கக் கேட்டனையோ?; பாயா நின்ற மலர் வாளி - (என் உடல் மீது) பாய்கின்ற மன்மதனின் மலர்க் கணைகள்; பறியா நின்றார் இன்மையால் - பறித்து என்னைப் பாதுகாப்பார் இல்லாமையினால்; ஓயா நின்றேன் - தளர்வுற்று நின்றேன்; உயிர் காத்தற்கு - என் (தவிக்கும்) உயிரைக் காப்பாற்ற; உரியார் யாவர் - உரியவர் தான் யார் உள்ளார்? (எவரும் இலர்.
எனது துயரைத் தணிக்க உன்னை அழைத்தால் நீயே துயர் மிக்கவனாய் உள்ளாய் என்பது கருத்து. உள்ளம் கறுத்தாய் - சிலேடை. விண்மீன்கள் சந்திரனின் மனைவியர் என்னும் புராணக் கருத்தால் உடுபதி என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You are wasting away, your body has turned pale, your heart has darkened,
- you have changed your nature and you burn; have you too, alone,
- heard those who saw her speak of her? Since there is no one to pull out
- the flower arrows that keep piercing me, I am failing; who is there to guard my life, O lord of the stars?'
What the poem says
Irāvaṇaṉ speaks to the moon as a fellow sufferer. The moon wanes, is pale, has a dark mark at its heart and gives off heat instead of coolness: all signs of lovesickness. Has the moon, too, heard someone describe Cītai?
He had called the moon to relieve him, only to find it in the same state. 'Dark of heart' plays on the moon's dark spot and on malice. The moon is called lord of the stars because the stars are said to be his wives.