கம்பராமாயணம் 3262 · ஆரணிய 7.113

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பணம் தாழ் அல்குல் பணி மொழியார்க்கு அன்புபட்டார் படும் காமக்
குணம் தான் முன்னம் அறியாதான் , கொதியாநின்றான் , மதியாலே
தண் அம் தாமரையின் தனிப் பகைஞன் என்னும் தன்மை ஒருதானே
உணர்ந்தான் ; உணர்வுற்று , அவன்மேல் இட்டு உயிர் தந்து உய்க்க உரைசெய்வான் .

பொருள் · Meaning in Tamil

பணம் - பாம்பின் படம்; தாழ் - தோற்கும்படியான; அல்குல் - அல்குலையும்; பனி மொழியார்க்கு - குளிர்ச்சி பொருந்திய பேச்சையும் உடைய பெண்களிடம்; அன்புபட்டார் - ஆசை கொண்டார்; படும் - அடைகிற; காமக் குணம் - காதல் நோயின் தன்மையை; தான் முன்னம் அறியாதான் - முன் எப்போதும் துய்த்தறியாத இராவணன்; மதியாலே கொதியா நின்றான் - சந்திரனால் துன்பம் கொண்டவனாக, தண் அம் தாமரையின் - குளிர்ந்த அழகிய தாமரைக்கு; தனிப் பகைஞன் என்னும் தன்மை - (இந்தச் சந்திரனே) நேரான எதிரி என்னும் உண்மையை, ஒரு தானே உணர்ந்தான் - தனக்குத் தானே உணர்ந்து கொண்டான்; உணர்வுற்று - இவ்வுண்மை உணர்வு வந்து எய்தியதும், அவன் மேல் இட்டு - அச் சந்திரன் மேல் வைத்து; உயிர் தந்து உய்க்க - தன் உயிரை அளித்துக் காக்குமாறு; உரை செய்வான் - கூறத் தொடங்கினான்.

இதுகாறும் தான் விரும்பிய மகளிரை அடைதலல்லாது நினைந்து வருந்தும் அனுபவம் இராவணனுக்கு ஏற்படவில்லை என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who had never before known the nature of the love-sickness suffered by those who love
  2. women with hips that put a serpent's hood to shame and words cool as dew, burning because of the moon,
  3. came to realise by himself alone that it is the sole enemy
  4. of the cool, lovely lotus; and realising it, he spoke to it, laying his life upon it to save.

What the poem says

Irāvaṇaṉ has always had any woman he wanted, so he has never known the torment of longing for one he cannot have. Now the moon makes him burn, and he works out for himself that the moon is the sworn enemy of the lotus, which closes at night.

Since Cītai's face is a lotus, the moon must be her enemy too. With this thought he begins to address the moon, entrusting his life to it and pleading to be saved.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇam tāḻ alkul paṉi moḻiyārkku aṉpupaṭṭār paṭum kāmak
kuṇamtāṉ muṉṉam aṟiyātāṉ, kotiyāniṉṟāṉ, matiyālē
taṇ am tāmaraiyiṉ taṉip pakaiñaṉ eṉṉum taṉmai orutāṉē
uṇarntāṉ; uṇarvuṟṟu, avaṉmēl iṭṭu uyirtantu uykka uraiceyvāṉ.