கம்பராமாயணம் 3261 · ஆரணிய 7.112

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1அவ் வழிச் சிலதர் அஞ்சி ,' ஆதியாய் ! அருள் இல்லாரை
இ வழி தருதும் என்பது இயம்பலாம் இயல்பிற்று அன்று ; ஆல் ,
செம் வழி கதிரோன் என்றும் தேரின்மேல் அன்றி வாரான் ;
வெவ் வழித்து எனினும் , திங்கள் விமானம் அத்தி இன் மேலது ' என்றார் .

பொருள் · Meaning in Tamil

அவ்வழிச் சிலதர் அஞ்ச - இராவணன் இவ்வாறு வினவிய போது பணியாளர் அச்சம் கொண்டு; ஆதியாய் - முதல்வனே; அருள் இல்லாரை - உன்னால் அருளப்பட்டாரையன்றிப் பிறரை; இவ் வழித் தருதும் என்பது - இங்கு யாம் அழைத்து வருதல் என்பது; இயம்பலாம் இயல்பிற்று அன்று - பேசத் தக்க தன்மையது அன்று; செவ்வழிக் கதிரோன் - சிவந்த கிரணங்கள் உடைய சூரியன்; என்றும் தேரின் மேல் அன்றி வாரான் - எப்போதும் தேர் மீதன்றி வரமாட்டான்; வெவ்வழித்து எனினும் - (உனக்கு) வெப்பம் தருவதாய் இருப்பினும்; திங்கள் - சந்திரன்; விமானத்தின் மேலது என்றார் - விமானத்தின் மீதில் உள்ளான் என்றனர்; ஆல் - அசை.

கதிரவனும் திங்களும் பயணம் செய்யும் முறைமை எடுத்துக் காட்டினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then, as the servants trembled, they said, 'O first one, that we should bring here
  2. anyone who does not have your grace is not a thing that can even be spoken of;
  3. the sun of the red path never comes except upon his chariot;
  4. though it scorches, the moon is the one who rides upon a vimāṉam.'

What the poem says

The frightened servants defend themselves. They would never dare bring anyone the king had not ordered. Besides, they point out, the sun always travels in his chariot, whereas this one is riding in an aerial car, a vimāṉam, as the moon does.

So, however hot it may feel to him, it really is the moon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av vaḻic cilatar añca,' ātiyāy! aruḷ illārai
iv vaḻit tarutum eṉpatu iyampal ām iyalpiṟṟu aṉṟāl,
cev vaḻik katirōṉ eṉṟum tēriṉmēl aṉṟi vārāṉ;
vev vaḻittu eṉiṉum, tiṅkaḷ vimāṉattiṉ mēlatu ' eṉṟār.