கம்பராமாயணம் 3260 · ஆரணிய 7.111

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
' '
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1கரும் கழல் காலன் அஞ்சும் காவலன் , கறுத்து நோக்கித்
தரும் கதிர்ச்' சீத யாக்கைச் சந்திரன் தருதிர் ' என்ன ,
முருங்கிய கனலின் மூரி விடத்தினை முகக்கும் சீற்றம் அத்து
அரும் கதிர் 'அருக்கன்தன்னை ஆர் அழைத்தீர்கள் ? ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

கருங்கழல் காலன் - பெரிய வீரக் கழலை அணிந்த இயமனும்; அஞ்சும் காவலன் - அஞ்சுகின்ற பெருமை படைத்த இராவணன்; கறுத்து நோக்கி - (தன் பணியாளரைச் சினந்து நோக்க; சீதம் தரும் கதிர் - குளிர்ச்சியைத் தரும் கிரணங்கள் கொண்ட; யாக்கைச் சந்திரன் - மேனி படைத்த சந்திரனை; தருதிர் என்ன - அழைத்து வாருங்கள் என்று (யான் கூற; முருங்கிய கனலின் - அழிக்கும் கொடு நெருப்பையும்; மூரி விடத்தினை - வலிமை மிக்க நஞ்சினையும்; முருக்கும் சீற்றத்து - கடும் கோபத்தையும்; அருங்கதிர் அருக்கன் தன்னை - (கொண்ட) வெப்பக் கிரணங்களையும் கொண்ட சூரியனை; 'ஆர் அழைத்தீர்கள்' என்றான் - அழைத்து வந்தது யார் என்று கேட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king whom even Kālaṉ with his great anklets fears glared and said:
  2. 'When I said, "Bring me the moon, whose body sheds cool rays,"
  3. who summoned the sun, whose fierce rays are fiercer in wrath
  4. than the fire that destroys and the deadly poison?'

What the poem says

Irāvaṇaṉ, whom even Kālaṉ, the god of death, fears, glares at his servants. He ordered them to bring the cool moon, but the light that has come burns worse than fire or poison.

So he accuses them of having summoned the blazing sun instead. In his fevered state he cannot believe this scorching orb is the moon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karuṅ kaḻal kālaṉ añcum kāvalaṉ, kaṟuttu nōkkit
tarum katirc ' cīta yākkaic cantiraṉ tarutir ' eṉṉa,
muruṅkiya kaṉaliṉ mūri viṭattiṉai murukkum cīṟṟattu
aruṅ katir 'arukkaṉtaṉṉai ār aḻaittīrkaḷ? ' eṉṟāṉ.