கம்பராமாயணம் 3259 · ஆரணிய 7.110

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மின் நிலம் திரிந்தது அன்ன - மின்னல் ஒன்று நிலத்தில் உலாவியது போன்ற; விழுநிலா - சிறந்த சந்திர கிரணமானது; மிதிலை சூழ்ந்த - மிதிலை நகரத்தைச் சூழ்ந்த, செந்நெல் அம் கழனி நாடன் - செந்நெல் வயல்களை உடைய விதேக நாட்டு அரசனான சனகனது; திரு மகள் - செல்வ மகளான சீதையின்; செவ்வி - வடிவப் பொலிவை; கேளா - (தங்கை வாயிலாகக்) கேட்டறிந்து; நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை - (அதனால்) தன் இனிய நலம், சிறப்பு ஆகியனவற்றை இழந்து தவிக்கும் இராக்கதனாம் இராவணனை; நாளும் தோலா - எந்நாளும் தோல்வியுறாத, துன்னலன் ஒருவன் - பகைவன் ஒருவன்; பெற்ற - அடைந்த; புகழ் எனச் சுட்டது - புகழாகிய பெருமை மனதைச் சுடுவது போன்று துன்பம் தந்தது. அன்றே - ஈற்றசை.

இப்பாடலில் அமைந்திருப்பது உவமையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The splendid moonlight, like lightning wandering over the ground,
  2. burned the rākṣasa, who, having heard of the beauty of the glorious daughter
  3. of the lord of the land of red-paddy fields around Mitilai, was wasting away, his good health gone,
  4. like the fame won by a foe who never loses a day's battle.

What the poem says

The brilliant moonlight looks like lightning moving across the earth. It burns Irāvaṇaṉ, who has been pining ever since he heard of the beauty of Cītai, daughter of King Caṉakaṉ of Mitilai, a land of red paddy fields.

The poet compares the pain to the way the fame of an undefeated rival burns a proud man: it is not a physical wound, but it stings without end.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṉ nilam tirintatu aṉṉa viḻunilā, mitilai cūḻnta
cennel am kaḻaṉi nāṭaṉ tiru makaḷ cevvi kēḷā,
nal nalam tolaintu cōrum arakkaṉai nāḷum tōlāt
tuṉṉalaṉ oruvaṉ peṟṟa pukaḻ eṉaccuṭṭatu aṉṟē.