கம்பராமாயணம் 3265 · ஆரணிய 7.116

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்னப் பன்னி , இடர் உழவா , ' இரவோடு இவனைக் கொண்டு அகற்றி ,
முன்னைப் பகலும் பகலோனும் வருக ' என்றான் ; மொழியாமுன் ,
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒளித்த ; ஒரு நொடியில்
பன்னற்கு அரிய பகலவனும் பகலும் வந்து பரந்த ; ஆல் .

பொருள் · Meaning in Tamil

என்னப் பன்னி - இவ்வாறு பல்வகையிலும் கூறி; இடர் உழவா - துன்பம் அனுபவித்து; 'இரவோடு இவனைக் கொண்டு அகற்றி - இரவு நேரத்தையும் இச்சந்திரனையும் இவ்விடம் விட்டு நீக்கி, முன்னைப் பகலும் பகலோனும் வருக - முன்பு போலவே பகற் பொழுதையும் சூரியனையும் கொண்டு வருக; என்றான் - என இராவணன் ஆணை பிறப்பித்தான்; மொழியாமுன் - இந்தக் கட்டளையைக் கூறி முடிக்கும் முன்பே; உன்னற்கு அரிய - நினைத்தற்கு (துன்பத்தால்) முடியாத; உடுபதியும் இரவும் ஒழிந்த - சந்திரனும் இரவுப் பொழுதும் அகன்று சென்றனர்; ஒரு நொடியில் - கண நேரத்துக்குள்ளாக; பன்னற்கு அரிய - புகழ்தற்கு அரிய பெருமை வாய்ந்த; பகலவனும் பகலும் வந்து பரந்த - சூரியனும் பகற் பொழுதும் வந்து பரவலாயின; உடு - விண்மீன்; ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having spoken thus at length, suffering, he said, 'Take this one away together with the night,
  2. and let the day and the sun come back as before!'; before he had finished speaking,
  3. the lord of the stars, painful even to think of, and the night were gone; in a moment
  4. the sun, beyond all praise, and the day came and spread over all.

What the poem says

After his long complaint, still in agony, Irāvaṇaṉ orders the night and the moon removed and the day and the sun brought back.

He has not even finished speaking when the moon and the night vanish, and in an instant the sun and full daylight spread over the city. Once again the poet shows how completely nature obeys him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṉap paṉṉi, iṭar uḻavā, ' iravōṭu ivaṉaik koṇṭu akaṟṟi,
muṉṉaip pakalum pakalōṉum varuka ' eṉṟāṉ; moḻiyāmuṉ,
uṉṉaṟku ariya uṭupatiyum iravum oḻinta; oru noṭiyil
paṉṉaṟku ariya pakalavaṉum pakalum vantu parantavāl.