கம்பராமாயணம் 3266 · ஆரணிய 7.117

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இருக்கின் மொழியார் எரி முகம் அத்து இன் ஈந்த நெய்யின் அவிர் செம் பொன்
உருக்கி அனைய கதிர் பாய அனல்போல் விரிந்தது உயர் கமலம் ;
அருக்கன் எய்த அமைந்து அடங்கி வாழாது , அடாத பொருள் எய்திச்
செருக்கி , இடையே திரு இழந்த சிறியோர் போன்ற செம் ஆம்பல் .

பொருள் · Meaning in Tamil

இருக்கின் மொழியார் - ரிக் முதலிய வேத மந்திரங்கள் அறிந்த அந்தணர்; எரிமுகத்தின் - நெருப்பின் முகத்தில்; ஈந்த நெய்யின் - சொரிந்த நெய்யினால்; அவிர் செம்பொன் உருக்கி அனைய - (எழும் நெருப்பில்) உருகிச் சுடர் விடும் தங்கம் போல்; கதிர்பாய - சூரியக் கதிர்கள் விரிய; அனல்போல் - நெருப்புத்துண்டு கனல் விடுதல் போல்; உயர் கமலம் விரிந்தது - மலர்களுட் சிறந்த தாமரைகள் மலர்ந்தன; அருக்கன் எய்த - சூரியன் வந்ததனால்; சேதாம்பல் - செவ்வாம்பல் மலர்கள்; அடாத பொருள் எய்தி - தம் தகுதிக்குப் பொருந்தாத செல்வம் பெற்றமையினால்; செருக்கி - கர்வம் பூண்டு; அமைந்து அடங்கி வாழா - இயல்பாக அடக்கம் கொண்டு வாழாது; இடையே திரு இழந்த - வாழ்வினிடையே அச் செல்வத்தை இழந்துவிட்ட; சிறியோர் போன்ற - கீழ் மக்களைப் போல் காட்சி தந்தன.

சந்திரன் சற்றே ஒளி வீசி இராவணன் ஆணையால் உடன் மறைந்ததால் குவளைப் பூக்கள் சிறிது காலம் செல்வம் பெற்று இழந்த சிறியோர் போன்றன என்றார்.

சேதாம்பல் - பண்புத்தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the rays spread like red gold melted and blazing in the ghee
  2. that those who chant the Ṛg pour into the mouth of the fire, the noble lotus opened like flame;
  3. when the sun arrived, the red water lilies were like petty men who, gaining wealth they did not deserve,
  4. grew proud instead of living quietly and contented, and lost their fortune midway.

What the poem says

The sun's rays spread like gold melting in the sacrificial fire into which Vedic priests pour ghee, and the lotuses open like glowing flames.

The red water lilies, which bloom only at night, had just opened under the brief moonlight and now close again. The poet likens them to small-minded people who come into undeserved wealth, grow arrogant instead of living modestly, and lose it all halfway through life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1irukkiṉ moḻiyār erimukattiṉ īnta neyyiṉ avircempoṉ
urukki aṉaiya katir pāya aṉalpōl virintatu uyar kamalam;
arukkaṉ eyta amaintu aṭaṅki vāḻā, aṭāta poruḷ eytic
cerukki, iṭaiyē tiru iḻanta ciṟiyōr pōṉṟa cētāmpal.