கம்பராமாயணம் 3267 · ஆரணிய 7.118
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பூணின் வெய்யோன் - உலகுக்கு அணியான கதிரவன்; ஒரு திசையே புகுத - ஒரு வழியில் வந்து புகவும்; அல் ஆண்டான் - இரவின் ஆட்சித் தலைவனாகிய சந்திரன்; நாணி நின்று - வெட்கமுற்று; ஒளி மழுங்கி - ஒளி குன்றியவனாய்; நடுங்கா நின்ற உடம்பினன் ஆய் - நடுக்கம் மேவிய உடலோடு, சேணில் நின்று - தொலை தூரம் அகன்று; புறம் சாய்ந்து - முதுகுகாட்டிச் சென்று; கங்குல் தாரம் பின் செல்ல - இரவாகிய மனைவி உடன் செல்ல; போவான் - நீங்கிச் சென்றான், புகழ் வேந்தர் - பெருமை மிக்க பேரரசர்; ஆணை செல்ல - கட்டளை பிறப்பிக்க; நிலை அழிந்த - தம் நிலை தடுமாறிய; அரசர் போன்றான் - சிற்றரசர் போலக் காட்சி தந்தான்.
அகலும் சந்திரன் தோல்வியுற்ற அரசர் போன்றிருந்தான். உவமை அணி. அல்லாண்டான் - இரவின் நாயகன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Ashamed, his light dimmed, his body trembling,
- turning his back from far off, with his wife the night following behind,
- as the sun, the world's ornament, entered from one quarter, the ruler of the night
- departed, like kings who lose their place when the command of a famous emperor runs.
What the poem says
As the sun, the jewel of the world, comes in from the east, the moon, lord of the night, retreats. Ashamed, pale and shaking, he turns his back and goes far away, with his wife, the night, following him.
He looks like a minor king who loses his throne when a great emperor's authority reaches his land and has to flee.