கம்பராமாயணம் 3268 · ஆரணிய 7.119
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கணம் குழை மகளிர்கள் - பலவகைக் காதணிகளும் பூண்ட அரக்க மகளிர்; மலரின் சேக்கையுள் - மலர்ப் படுக்கையில், மணந்த பேர் அன்பரை - தம்மை மணந்த கணவர் தம்மை, புணர்ந்தவர் - அணைத்து மகிழ்ந்தவர்; இடை ஒரு வெகுளி பொங்கலால் - கூடலிடையே தம் கணவர்பால் கொண்ட ஊடலின் சினம் மீதூர்தலால்; கங்குல் வீந்தது - இரவு முடிந்து போய் விட்டது; என்று உணர்ந்திலர் - என அறியாமற் போயினர்; கனவினும் - உறக்கத்தில் எழும் கனவிலும்; ஊடல் தீர்ந்திலர் - தம் ஊடல் நீங்காதவராய் விளங்கினர்.
விரைவில் நீங்கும் இரவென உணராமல் ஊடற்கோபம் தொடர உறங்கினர் அரக்க மகளிர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Women who, on beds of flowers, had embraced the dear husbands they had wed,
- because a flash of anger rose up between them,
- those women with clustered earrings did not realise the night was over;
- even in their dreams they had not ended their quarrel.
What the poem says
The poet now describes the strange effects of the night being cut short. Rākṣasa women, wearing many earrings, had been lying with their husbands on flower beds when a lovers' quarrel flared up.
They fell asleep still sulking, and the night ended so suddenly that they never noticed it had passed. Even in their dreams the quarrel was not made up.