கம்பராமாயணம் 3269 · ஆரணிய 7.120
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நள் இரவிடை - நடு இராத்திரியெனக் கருதத்தக்க வேளையில், தலைவர் நீங்கலால் - (விடிந்து போனதால்) தங்கள் கணவர் பிரிந்து சென்றமையினால்; தள்ளுறும் உயிரினர் - உடல்விட்டு நீங்கும் உயிரென்ற தன்மை உடையராய்; உறும் நடுக்கம் நீங்கலர் - மெய்யில் ஏற்பட்ட நடுங்குதல் நீங்காதவராய் (அரக்க மகளிர் சிலர்; கொள்ளையின் அலர் - மிகுதியாகச் செழித்து மலர்ந்த; கருங்குவளை நாள் மலர் - புதிய கருங்குவளை மலர்கள்; கள் உகுவன என - தேன் சிந்துவன போன்று; கலுழும் கண்ணினார் - கண்ணீர் பொழியும் கண்களை உடையார் ஆயினர்.
இரவு நீங்கியதால் ஏற்பட்ட விசித்திர நிகழ்ச்சிகளில் ஒன்றாக இதனைக் கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With their lives slipping from them, because their lords had left them
- in what was still the middle of the night, they could not shake off their trembling,
- and their weeping eyes were like fresh dark blue water lilies blooming in profusion
- that drip with honey.
What the poem says
Other rākṣasa women suffer the opposite fate. Because day broke at what should have been midnight, their husbands have already left them, and they feel as if their lives are leaving their bodies.
Still trembling, they weep, and their tear-filled eyes look like freshly opened dark blue water lilies dripping with honey. This is another of the odd consequences of Irāvaṇaṉ's order.