கம்பராமாயணம் 3270 · ஆரணிய 7.121

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலர் - மேலும் சில அரக்க மகளிர்; அணைமலர்ச் சேக்கையுள் - பஞ்சு மெத்தை மேல் மலர் தூவிய படுக்கையில்; ஆடல் தீர்ந்தனர் - கலவி முற்றியவராய்; பணைகளைத் தழுவிய - பருத்த மரங்களைப் பின்னிய; பவளவல்லி போல் - பவளக் கொடிகளைப் போல; இன் உயிர்த் துணைவரை - இனிய உயிரனைய கணவர்களை; இணை மலர்க் கைகளின் - மலர் போன்ற இரண்டு கரங்களாலும்; இறுகத் தழுவினர் - அழுத்தமாக அணைத்தவாறு; துயில்கின்றார் - உறங்கினர்.

உயிர்த் துணைவர் - உவமத் தொகை (உயிர் போன்ற துணைவர்). ஆடவரின் திண்மைக்கு மரங்களும், பெண்டிரின் எழிலுக்கும் மென்மைக்கும் பவளக் கொடிகளும் பொருந்திய உவமைகளாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some, their love-play over on beds strewn with flowers over cushions,
  2. like coral creepers wound around stout trees,
  3. with their two flower-like hands clasping tight
  4. the husbands dear as their own lives, lay sleeping.

What the poem says

Other rākṣasa women, their lovemaking finished, sleep on in flower-strewn beds, holding their husbands tightly in both hands.

They look like coral creepers twined around thick tree trunks. The trees suit the men's sturdy build, and the creepers the women's grace and softness. Husbands 'dear as life' is a compressed simile in the Tamil.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇaimalarc cēkkaiyuḷ āṭal tīrntaṉar,
paṇaikaḷait taḻuviya pavaḷa vallipōl,
iṇai malark kaikaḷiṉ iṟuka iṉ uyirt
tuṇaivarait taḻuviṉar, tuyilkiṉṟār cilar.